சார்.. அப்போ மகாபாரதம்.. நிருபர் கேள்வியால்.. கண் சிவந்த எச். ராஜா.. "கெட் அவுட்".. இப்படி பேசலாமா?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, நிருபரின் மகாபாரதம் தொடர்பான கேள்வியால், கடுமையாக கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பொதுவாகவே செய்தியாளர் சந்திப்பில் கோபமாக பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்தான். இதற்கு முன்பே அவர் பல முறை செய்தியாளர் சந்திப்பில் கோபம் அடைந்துள்ளார்.

கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் பதில் சொல்ல முடியவில்லை என்றால் உடனே நீங்கள் ஆன்டி இந்து அல்லது ஆன்டி இந்தியன் என்று சொல்லிவிட்டு அவர் கோபமாக கிளம்பி சென்று இருக்கிறார்.

H Raja gets angry in press meet while talking about Maharabaratham and Anti Hindu

சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் படம் பார்த்துவிட்டு பேசிய போது செய்தியாளர்களிடம் கோபம் அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய எச். ராஜா.. கோவில்களில் சிலைகள் திருடு போகிறது என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. பயன்படுத்தப்படாத, குறைவாக பயன்படுத்தப்படும் கோவில்களில் இருந்துதான் சிலைகள் காணாமல் போகின்றது. பழனி கோவிலில் இருக்கும் நவபாஷாண சிலையை திருட போகிறார். இது தொடர்பாக நம்ப தகுந்த தகவல் எனக்கு கிடைத்து உள்ளது. வள்ளலார் யார்?

அவரின் அடையாளம் என்ன? திருவள்ளுவர் எப்படி இருந்தார். 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் அவர் இருந்தார். அவரின் உருவத்தையே இவர்கள் மாற்றிவிட்டார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தோம் என்று எங்களை குற்றஞ்சாட்டுகிறீர்களே. நான் சொல்கிறேன்.. வள்ளலாருக்கு திருநீறு இல்லாத படத்தை வைத்து அதை முதல்வர் ஸ்டாலின் தனது நிகழ்ச்சியில் ஏன் பயன்படுத்தினார். நாய் நக்கியது போல அவரின் நெற்றி ஒன்றுமே இல்லாமல் இருக்கிறதே.

H Raja gets angry in press meet while talking about Maharabaratham and Anti Hindu

அது மட்டும் தவறு இல்லையா? இதெல்லாம் இந்து விரோத செயல். செய்தியாளர்கள் யாராவது இதை கண்டித்து உள்ளீர்களா? உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளிகள் இந்து விரோதிகளாக இருக்கிறார்களா என்பதற்காக நீங்கள் இந்து விரோதிகளாக இருக்கிறீர்கள், என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர்.. வள்ளலாருக்கு திருநீறு இருந்தது என்பதற்காகவே அவரை இந்து என்று சொல்ல முடியாது. அனைத்து சமயமும் சமம் என்பது தானே அவரின் கொள்கை, என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொள்ளாத எச். ராஜா.. நீங்கள் எல்லாம் இந்து விரோதிகள். நீங்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள். நீங்கள் திட்டமிட்டு இந்துவுக்கு எதிராக பேசுகிறீர்கள். இந்துவிற்கு எதிராகத்தான் பேச வேண்டும் என்று திட்டமிட்டு நீங்கள் பேசுகிறீர்கள். எனக்கு என்ன பிரச்சனை என்றால் நீங்கள் எல்லாம் உண்மைகளை படிப்பதே இல்லை. கால்டுவெல் எதையோ எழுதி வைத்து 'இருக்கிறான்' என்று அதை படித்தீர்கள். நீங்கள் யாருமே படிக்கிறதே இல்லை.

H Raja gets angry in press meet while talking about Maharabaratham and Anti Hindu

'அவன்' எழுதிய கற்பனைகளை, புனைவுகளை படிக்கிறீர்கள், என்று எச். ராஜா கூறினார். உடனே ஒரு செய்தியாளர் மகாபாரதம் மாதிரி புனைவா, என்று கேட்டார். இதை கேட்டு கோபம் அடைந்த எச். ராஜா.. நாற்காலியிலிருந்து எழுந்துவிட்டார்.

"நான் உங்களை கண்டிக்கிறேன்.. கெட் அவுட்..", என்று ஆவேசமாக கூறினார். உடனே செய்தியாளர்.. புனைவு என்று சொல்கிறீர்கள்.. நீங்கள் ஒரு புத்தகத்தை சொல்லும்போது நானும் சொல்ல கூடாதா. அதனால்தான் மகாபாரதம் என்று சொன்னேன். அதுவும் புனைவு தானே, என்றார். இதனால் கோபம் அடைந்த எச். ராஜா 10 நிமிடங்கள் வாக்குவாதம் செய்தார். செய்தியாளர்களை தரைகுறைவாக பேசி, எச். ராஜா மோசமாக நடத்தியது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+