திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு போறீங்களா.. இனி இலவச தரிசனம்தான்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்றது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். இங்கு மாதந்தோறும் பவுர்மணி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவர். அது போல் இங்கு மகா சிவராத்திரி, கார்த்திகை தீபமும் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது.

இந்த தலம் பஞ்ச பூதங்களில் ஒன்று. சிவன் இங்கு நெருப்பு வடிவில் காட்சி தருகிறார். இங்கு மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இங்கு ஏற்றியவுடன்தான் வீடுகளில் ஏற்றுவர். இந்த கோயிலில் மலை மீது டன் கணக்கில் நெய், திரிக்காக நிறைய வேஷ்டிகள், தீபம் ஏற்ற கொப்பரை ஆகியவை கொண்டு செல்லப்படும்.
மாலை 6 மணியானதும் கோயிலில் ஒரு தீபம் ஏற்றுவர். அதை அப்படியே மலை இருக்கும் பகுதி நோக்கி காட்டுவர். உடனே மலை மீது உள்ள சிவாச்சாரியார்கள் அந்த விளக்கு எரிவதை பார்த்துவிட்டு மலை மீதும் தீபம் ஏற்றுவர். இந்த தீபம் மழை, காற்று, என எந்த இயற்கை சீற்றம் வந்தாலும் அணையாமல் 10 நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
இந்த நிலையில் அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாளன்று சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு பொது தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தந்து வருகிறோம். மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் செயல்படுத்தப்பட்டு வந்த அன்னதானத் திட்டத்தை முழு நேரமாக செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முழு நேர அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.78 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.

2023-2024 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பின் படி அண்ணாமலையார் கோயிலில் உள்ள கிரிவலப் பாதையில் புகழ்பெற்ற 10 திருக்கோயில்களின் பிரசாதங்கள் பக்தர்களுக்கு கிடைக்கும் வகையில் பிரசாச கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அன்றாடம் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 50 மூலம் ஆண்டுக்கு ரூ 1.23 கோடி வருவாய் கிடைத்து வந்தது. இந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து பொது தரிசனம் மூலம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சேகர் பாபு தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications