அடித்து உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்..திருவண்ணாமலையில் மறுவாக்குப் பதிவு இல்லையே! ஏன்?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 193வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை வாக்குச்சாவடி முகவர் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் 208 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படாதது ஏன்?என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அதற்கான விளக்கத்தை தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆங்காங்கே சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

மற்ற இடங்களில் வாக்குப்பதிவு வேகமாக நடந்தது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.

Tamil Nadu Assembly Election 2026 TN Polls EVM

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற வந்த நிலையில் திடீரென, வாக்குச்சாவடிக்குள் இருந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் பூத் ஏஜெண்ட் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியவரை போலீசர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் 208 வாக்குகள் பதிவாகி இருந்தது.

வாக்குப்பதிவு இயந்திரம் சேதம்

இதனால் இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. கீழ்பாலூர் வாக்குச்சாவடிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை தந்து ஆய்வு செய்தனர். இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரமும் முழுமையாக உடைக்கப்பட்ட நிலையில் அங்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

தேர்தல் ஆணையம்

இருந்தபோதும் மாற்று ஏற்பாடாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக இருந்த நிலையில் அவை கொண்டுவரப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தல் நிலவரம் தொடர்பாக முழுமையாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம் தமிழகத்தில் முழுமையாக தேர்தல் நடைபெற்றதாகவும், சிறு சிறு சலசலப்புகள் தவிர்த்து, எந்த வித பெரும் அசம்பாவிதங்கள் இன்றி தேர்தல் நடந்ததாக கூறியுள்ளது. மேலும் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்கு பதிவுக்கு தேவை இல்லை எனவும் அறிவித்தது.

மறு தேர்தல்

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலையில் முழுமையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட போதும் அங்கு மறுவாக்கு பதிவு நடத்தப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

கண்ட்ரோல் யூனிட்

அதாவது வாக்குப்பதிவு இயந்திரம் என்பது நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை நாம் பார்ப்பதற்காக தான். மேலும் நாம் வாக்களித்ததற்கு தான் வாக்கு விழுந்திருக்கிறதா என்பதை விவிபாட் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் வாக்களித்த உடனேயே அந்த வாக்குகள் கண்ட்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவாகிவிடும். எனவே ஏற்கனவே பதிவான 208 வாக்குகளும் அங்கு தான் பதிவாகி இருந்தன. மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டதும் தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது எனவே வாக்கு பதிவு இயந்திரங்களை மாற்றினாலும் கண்ட்ரோல் யூனிட்டில் அந்த வாக்குகள் இருக்கும் என்பதால் இதற்கு முன் பதிவான வாக்குகளுக்கு எந்த சேதாரமும் இல்லை. அதனால் தான் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படவில்லை" என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+