திருவண்ணாமலை: 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெறையூரை அடுத்த ஆங்குனத்தில் கி .பி 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் , உதயராஜா மற்றும் சரவணன் இணைந்து வெறையூர் பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது , வெறையூரை அடுத்த ஆங்குனம் கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் பலகை சிற்பம் ஒன்று இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த கோபிநாத் அளித்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.
அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார்.

வலது கரம்
எட்டு கரங்களில் தனது மேல் வலது கரத்தில் சங்கும் ஏனைய வலது கரங்கள் முறையே வாள் , அம்பு ஏந்திய நிலையில் கீழ் வலக்கரம் இடையின் மீது ஊறு முத்திரையிலும் , மேல் இடது கரத்தில் சக்கரமும் ஏனைய கைகள் முறையே வில் , கேடயம் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் தனது இடை ஆடையைச் சுருட்டி பிடித்தவாரு காட்டப்பட்டுள்ளது.

இருபுறம் வீரர்கள்
கொற்றவையின் இருபுறமும் இருவீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். ஒரு வீரர் கைகூப்பி வணங்கிய நிலையிலும், மற்றொருவர் நவகண்டம் தரும் வகையிலும் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாரு காட்சி தருகிறது. இக்கொற்றவை சிற்பத்தின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் இது பல்லவர் கலைபாணி என்றும், இதன் காலம் கி.பி எட்டாம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

வயல்வெளி
மேலும் இவ்வூரின் கிழக்கே உள்ள தனது வயல்வெளியில் போர்வீரன் சிற்பம் ஒன்று இருப்பதாகத் ஏழுமலை என்பவர் அளித்த தகவலின் பெயரில் அதனையும் ஆய்வு மேற் கொண்டனர். சுமார் 3 அடி உயரம் உள்ள அச்சிற்பம் சதுர் புஜத்துடன் மேல் இருகரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும் , கீழ் வலக்கரம் அபய முத்திரையில் கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையிலும் உள்ள விஷ்ணு துர்க்கை எனக் கண்டறியப்பட்டது.

சரப்பளி
தலையை ஜடா மகுடம் அலங்கரிக்க ,கழுத்தில் சரப்பளி மற்றும் சவடி அணிந்து , ஆடையாக மார்பு கச்சையும் , இடையிலிருந்து பாதம் வரை ஆடையும் அணிந்து அழகுறக் காட்சி தருகிறது. இச்சிற்பத்தின் ஆடை அணிகலன்களை வைத்து இதன் காலம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்களின் சிற்பமாகக் கருதலாம். சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கொற்றவை இன்றும் வெட்டவெளியில் வெயிலுக்கு மழைக்கும் நனைந்து கொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications