திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிட் நைட்டில் மொட்டை மாடியில் ஆபாச வீடியோ.. சிறுமிகள் விட்ட கண்ணீர்.. தி.மலை காப்பகத்துக்கு சீல்

சட்டவிரோதமாக இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இயக்குனர் அமீர், காதல் ஜோடியை பிரிக்க முயற்சி செய்கிறாரா?-வீடியோ

    திருவண்ணாமலை: ராத்திரிகளில் ஆபாச வீடியோக்களை பார்த்தே ஆக வேண்டும் என்று சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்த காப்பக நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அத்துடன் சட்டவிரோதமாக நடத்தி வந்த அந்த குழந்தைகள் காப்பகத்தையும் பூட்டி சீல் வைத்தனர்.

    சமீபத்தில் திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக குழந்தைகள் காப்பகங்களில் இருந்து சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

    அப்போது காப்பகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து எழுத்துபூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அதில், கிரிவலப்பாதையில் செயல்பட்ட அருணை குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த சிறுமிகள் தங்களுக்கு காப்பக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறினர்.

    கலெக்டர் கந்தசாமி

    கலெக்டர் கந்தசாமி

    இந்த விஷயம் மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தார். அதனால் நேரடியாக விசாரணையில் இறங்கினார். மாவட்ட எஸ்பி உதவியுடன் இந்த விசாரணை ஆரம்பமானது.

    2 கம்ப்யூட்டர்கள்

    2 கம்ப்யூட்டர்கள்

    குழந்தைகள் பாதுகாப்பு நல குழும அலுவலர் கோகிலா மற்றும் போலீசார் இந்த காப்பகத்தில் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, 2 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்டாப் இருந்ததை கைப்பற்றினர். அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பாலியல் தொல்லை

    பாலியல் தொல்லை

    அந்த காப்பகத்துக்கு மேலாளராக வினோத்குமார், நிர்வாகியாக நந்தகுமார் ஆகியோர் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. வினோத்குமாருக்கு வயது 31, நந்தகுமாருக்கு வயது 35. இவர்கள் இருவரும் நண்பர்கள். காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார்கள்.

    பட்டினி போடுவார்கள்

    பட்டினி போடுவார்கள்

    இதுகுறித்து காப்பக சிறுமிகள் போலீசாரிடம் சொன்னதாவது: "ராத்திரிகளில் கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை போட்டுக்காட்டி அதை பார்க்கும்படி ரெண்டு பேரும் எங்களை கட்டாயப்படுத்துவார்கள். அந்த படத்தை பார்த்ததும், அதில் உள்ளபடி எங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்கள். அப்படி நாங்கள் நடந்து கொள்ளாவிட்டால், எங்களுக்கு சாப்பாடு போடாமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்துவார்கள்.

    பீர் திருவிழா

    பீர் திருவிழா

    பீர் திருவிழா என்று ஒன்று நடத்துவார்கள். இதில் எங்களை மதுகுடிக்க வைத்து ஆபாசமாக நடந்து கொள்வார்கள்" என்று கண்ணீர் மல்க கூறினர். இதையடுத்து, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, வினோத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததுடன், காப்பகத்தை பூட்டியும் சீல் வைத்தனர்.

    சீல் வைக்கப்பட்டது

    சீல் வைக்கப்பட்டது

    காப்பகத்தில் தங்கியிருந்த 19 சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இப்போது தலைமறைவாக உள்ள நந்தகுமாரை தேடி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 3 காப்பகங்களுக்கு கலெக்டர் கந்தசாமியின் நடவடிக்கையால், சீல் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Children rescued from the fake guardian and sealed the children home by Tiruvannamalai police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X