பூத்துக்குள்.. அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த சப்-இன்ஸ்பெக்டர்.. பாதுகாப்பு பணியில் சோகம்!
பாதுகாப்பு பணியின்போது மாரடைப்பால் காவலர் உயிரிழந்தார்
Recommended Video
திருவண்ணாமலை: பூத்துக்குள் மும்முரமாக தேர்தல் வேலையை பார்த்து கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்து விட்டார்!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது.. 2 கட்டமாக 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடந்த தேர்தலின்போது பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. மொத்தம் 315 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இதனுடைய பாதுகாப்பு பணிக்காக 35 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முதலே இந்த பாதுகாப்பு தீவிரம் நடந்து வந்தது. அதில் ஒருவர்தான் சப் இன்ஸ்பெக்டர் முருகதாஸ்.. திருவண்ணாமலை டவுன் புதுகார்கானா தெருவை சேர்ந்தவர்.. 58 வயதாகிறது.. திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் கன்ட்ரோல் ரூமில் வேலை பார்த்து வந்தவர்.
துரிஞ்சாபுரம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, செங்கம் சாலையில் உள்ள சண்முகா அரசு பள்ளியில் நடந்து வருகிறது. இந்த மையத்தில்தான் நேற்றிரவு முருகதாஸ் பாதுகாப்பு பணிக்கு போனார்.. பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோதே அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது.. அதனால் நெஞ்சை பிடித்தபடியே மயங்கி கீழே விழுந்தார்.
இதை பார்த்து பதறிய சக போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகதாஸ் இறந்துவிட்டார்.. அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாலும், பாதுகாப்புக்கு போன சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை திருவண்ணாமலையில் ஏற்படுத்தியது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications