Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"துள்ளுதே" திருவண்ணாமலை.. பூரிப்பில் எகிறி குதிக்கும் "ஜடேரி நாமக்கட்டி".. கோட்டைக்கு பறந்த மேட்டர்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையே மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருக்கிறது. அத்துடன், நாமக்கட்டி தொழிலாளர்கள், முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்துள்ளனர்.. என்ன காரணம்?

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி திருமண் (நாமகட்டி) தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், 2021, ஜூன் 15-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வீரவாநல்லூர் சவுராஷ்டிரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடிபுட்டா சேலைக்கும், 2021, ஏப்ரல் 29-ம் தேதி மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் அமைப்பு சார்பில், கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.

Thiruvannamalai Jaderi Namakatti Workers are so happy and What are their demands

மேற்கண்ட இந்த 3 பொருட்களுக்கான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசின் அரசிதழில் கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது. இப்போது 4 மாதங்கள் கடந்த நிலையில், விண்ணப்பங்களுக்கு மறுப்புகள் எதுவும் வராத நிலையில், ஜடேரி நாமகட்டி, செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்து உள்ளது.

ஸ்பெஷல் அங்கீகாரம்: இந்த குறியீடு கிடைத்துள்ளதால், இந்த 3 பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இந்த பொருட்களின் விற்பனை விலையும் உயரும். இந்த பொருட்களுக்கென்றிருக்கும் தனி சட்டப்பாதுகாப்பு கிடைக்கும். விற்பனை செய்ய உலக நாடுகள் அங்கீகாரம் வழங்கும்.

அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட இடங்களில் உற்பத்தி செய்யும் பகுதியை தவிர மற்ற பகுதியில் வேறு யாராவது தயாரித்து அந்த பொருளை விற்கும்போது, இந்த குறிப்பிட்ட பெயரை பயன்படுத்த முடியாது.
அந்தவகையில், "ஜடேரி நாமக்கட்டி"க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், பலரது கவனத்தை பெற்றுவருகிறது.. இந்த நாமக்கட்டியானது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஜடேரி கிராமத்திலிருந்தே தயாரிக்கப்படுகிறது. இதை நம்பி, 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் உள்ளனர்..

நாமக்கட்டி: இந்த நாமக்கட்டியை எப்படி செய்வார்கள் என்றால், வெள்ளை மண், ஜடேரி அடுத்த தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் இருந்து வெட்டி எடுத்து வந்து, செக்கு இழுப்பதை போல் மாடுகளை பூட்டி, இழுத்து பவுடராக அரைக்கப்படுகிறது.

அதற்கு பிறகு, தண்ணீரில் ஊற வைத்து, அதிலுள்ள கழிவுகள் அகற்றப்படுகிறது. அந்த வெள்ளை மண் ஈரப்பதத்துடன் இருக்கும்போது, நாமக்கட்டிகளாக தட்டி, வெயிலில் காய வைத்து ரசாயனம் கலப்பில்லாமல் தயாரிப்பார்கள்.. இந்த நாமக்கட்டியானது, மருத்துவ பயன்பாடுகளுக்கும் உகந்தது..

புவிசார் குறியீடு: இந்நிலையில், புவிசார் குறியீடு கிடைத்துவிட்டதால், நாமக்கட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள்.. ஒருவருக்கொருவர் இனிப்புகளை தந்து, இனிய தருணத்தை பரிமாறி கொண்டனர். மேலும், ஜடேரி நாமக்கட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளனர்..

அதில், "ஜடேரி கிராமத்தில் ஆண்டுக்கு 100 டன் அளவுக்கு நாமக்கட்டி தயாரிக்கப்படுவதால், இங்கிருந்து, திருப்பதி உள்ளிட்ட வைணவ திருத்தலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.. இத்தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை.

நாமக்கட்டி: நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் வெள்ளைப்பாறையை வெட்டி எடுக்க, அரசுக்கு பணம் செலுத்த வேண்டி உள்ளது.. ஒரு யூனிட் வெள்ளை பாறையை வெட்டி எடுத்து கொண்டு வர ரூ.5 ஆயிரம் செலவாகிறது. எனவே, வெள்ளைப்பாறையை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும். மேலும் மழைக்காலங்களில் நாமக்கட்டியை உலர்த்த, கிடங்கு அமைத்து தரவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+