அரசு ஆண்கள் விடுதியில் இப்படியா? திருவண்ணாமலை காதலியால் சென்னையையே கிறுகிறுக்க விட்ட பரிதாப மாணவர்
திருவண்ணாமலை: சென்னையில் அரசு ஆண்கள் விடுதியில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. இதுக்கெல்லாம் இப்படியொரு முடிவு எடுப்பதா? என்று திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கோபத்திலும், வருத்தத்திலும் கேள்வி எழுப்புகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சோக சம்பவம் நடந்தது.. மணலியை சேர்ந்த ரகு என்பவரின் மகன் ஆனந்த்.. 26 வயதான ஆனந்த், அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலைபார்த்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்கள்.

மன உளைச்சல்: ஆனால், ஒரு மாத காலமாக, ஆனந்த்தின் காதலி அவரிடம் சரியாக பேசாமல் தவிர்த்து வந்திருக்கிறார்.. திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி வந்துள்ளார்.. இதனால் மனமுடைந்த ஆனந்த், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தன்னுடைய ரூமில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... காதலி ஏன் பேசவில்லை என்று தெரியாத மனஉளைச்சலிலேயே, அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் ஒரு மாணவர், தன்னுடைய உயிரை விட்டுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டம் தொண்டமானூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதேசி.. 19 வயதாகிறது.. சென்னையில் மாநில கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக திருவல்லிக்கேணியில் உள்ள அரசு விக்டோரியா ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து, காலேஜூக்கு போய்வருகிறார்.
அரசு கல்லூரி: இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் காலேஜூக்கு சென்றுவிட்டு, ஹாஸ்டலுக்கு வந்துள்ளார் சுதேசி.. அப்போது தன்னுடைய ரூமில் யாரும் இல்லாத நேரத்தில் சுதேசி, ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்..
சிறிது நேரம் கழித்து ரூமுக்குள் நுழைந்த சக நண்பர்கள், சுதேசியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்து, திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து சுதேசி உடலை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டத்துக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
யாரந்த காதலி: அப்போதுதான், சுதேசிக்கு ஒரு காதலி இருப்பது தெரியவந்தது. தன்னுடைய சொந்த ஊரில் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார் சுதேசி.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண், சுதேசியிடம் சில நாட்களாகவே சரியாக பேசவில்லையாம்.. காதலி பேசாமல் இருப்பதை தாங்கி கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளார் சுதேசி..
ஒருகட்டத்தில் விரக்தி அடைந்து, சுதேசி தற்கொலை செய்து கொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இருந்தாலும், சுதேசியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications