ஞாபகம் இருக்கா.. 15 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 35 வயது பெண்.. அவர் இப்போ ஜெயிலில்.. அதிரடி கைது
சிறுவனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்
திருவாரூர்: '35 வயது அங்கன்வாடி பெண் ஊழியர் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவனுடன் தலைமறைவாகி இருந்த பெண்ணை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை..'
Recommended Video
கடந்த வாரம் ஒரு அதிர்ச்சி சம்பவம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே நடந்தது.. எரவாஞ்சேரி அருகே வசித்து வந்த தம்பதி பாலகுரு - ராசாத்தி.. இவர்களுக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அதே தெருவில் வசித்து வரும் தம்பதி பாலகிருஷ்ணன்-லலிதா.. இவர்கள் கட்டிட வேலை செய்து வருகிறார்கள்.. 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார். லலிதாவுக்கு 35 வயதாகிறது..

லலிதா
தேதியூரில் உள்ள அங்கன்வாடியில் சமையல் ஊழியராகவும் லலிதா வேலை பார்த்து வருகிறார்.. பாலகுருவின் 15 வயது மகன் எரவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.. இந்நிலையில்தான், 35 வயதுடைய லலிதாவுக்கு 15 வயதே சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. சில மாதங்களாகத்தான் சிறுவனை, லலிதாவுக்கு தெரியும்.. ஆனால், அதற்குள் நெருங்கி பழகிவிட்டார்.. இந்த விஷயம், சிறுவனின் பெற்றோருக்கு தெரிந்துள்ளது.. மகனை கண்டித்துள்ளனர்..

சித்தி வீடு
இங்கே இருந்தால் சரிவராது என்று நினைத்து, மகனை எரவாஞ்சேரி அக்ரஹார பகுதியில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்க வைத்தனர்.. அதனால் சித்திவீட்டில் இருந்தபடியே பள்ளிக்கு சென்று வந்திருக்கிறான் சிறுவன். இந்த நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி, வழக்கம்போல் ஸ்கூலுக்கு சென்ற சிறுவனை காணவில்லை.. வீட்டுக்கும் வரவில்லை.. அதனால் குடும்பத்தினர் பதறி போய் எல்லா இடங்களிலும் தேடினர்.. ஆனால் கிடைக்கவில்லை..

விசாரணை
எனவே, இதுகுறித்து எரவாஞ்சேரி போலீசில் புகார் தந்தனர். போலீசாரும் அதன்பேரில் விசாரணை நடத்தி வந்தனர்.. அப்போதுதான், லலிதா, அந்த சிறுவனுடன் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, லலிதாவின் செல்போன் நம்பர் சிக்னலை வைத்து அவரை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கினர். கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு, லலிதாவை கண்டுபிடித்துவிட்டனர்..

போக்சோ
ஏரவாஞ்சேரி போலீசார் வேளாங்கண்ணி சென்று, அங்கிருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.. 35 வயதுடைய லலிதாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.. தற்போது அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. அவருடன் இருந்த 15 வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடமும் ஒப்படைத்தனர்... கடந்த ஒரு வாரமாகவே, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை போலீசார் தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications