Annamalai: வாங்கிய காசுக்கு அளவாக கூவுங்கள் கமல்! அண்ணாமலை கடும் விமர்சனம்!
திருவாரூர்: வாங்கிய காசுக்கு அளவாக கமல் கூவ வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திருவாரூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மீது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்வடையும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கடைசி நேரத்தில் ஜெட் வேகத்தில் தங்கள் கட்சி , கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திருவாரூரில் பாஜக வேட்பாளர் கோவி. சந்துருவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், " திருவாரூர் தொகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக திமுக வெற்றி பெற்று வருகிறது.
ஆனால் பொருளாதாரத்தில் கடைசிக்கு முந்தைய இடத்தில்தான் இந்த மாவட்டம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நெல் கொள்முதலில் இரண்டாவது இடத்தில் இருந்தது திருவாரூர். ஆனால் தற்போது 10ஆவது இடத்தில் இருக்கிறது.
அறுவடை செய்யும் நெல்லை பாதுகாக்க எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. மத்திய அரசு கொடுக்கும் நிதி கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால் நெல்லை மத்திய அரசு வாங்குவதில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார்.
உர மானியமாக ரூ 29,132 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. அந்த உரத்தைக் கூட விவசாயிகளுக்கு கொடுப்பதில்லை. மத்திய அரசு நெல் குவின்டாலுக்கு ரூ 2369 உயர்த்திக் கொடுத்தது. இத்துடன் 105 ரூபாய் சேர்த்து கொடுத்து 2500 ரூபாய் வழங்கியதாக திமுக அரசு கூறி வருகிறது.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பிரதமர் மோடியுடையது. மஞ்ச பைதான் ஸ்டாலினுடையது. கோவில் வளர்ச்சிக்கான மத்திய அரசின் பிரசாத் திட்டத்தில் திருவாரூருக்காக திமுக அரசு 1 ரூபாய் கூட பெறவில்லை. திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தை அசுத்தமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனை விட அமைச்சர் சேகர்பாபு அதிக குடமுழுக்கு செய்திருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். வாங்கிய காசுக்கு அளவாக கமல் கூவ வேண்டும். திருவாரூரில் எதிரணி சார்பில் போட்டியிடும் கலைவாணன் மீது கொலை வழக்குகள் உள்ளன.
கலைவாணன் அண்ணன் மகன் கலைவேந்தன் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் உள்ளன. நன்னிலத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சித் தலைவர் முபாரக், கொரோனா காலத்தில் போலி மருந்தில் அரசு லோகோவை போட்டு விற்பனை செய்தவர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு திருபுவனம் ராமலிங்கம் கொலையில் நேரடி தொடர்பு காரணமாக முபாரக் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு ரெய்டு நடத்தியது. அவருக்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிராக போடப்படும் ஓட்டு. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனை தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை விமர்சித்திருந்தார். லிவிங்ஸ்டன், வடிவேல் காமெடியில், லிவிங்ஸ்டன் வடிவேலுவிடம், "வாங்கிய காசுக்கு மேல் கூவுறான்டா" என ஃபீல் செய்து சொல்வார். அந்த கிளிப்பிங்கை போட்டு இவ்வாறு கலாய்த்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications