'அறைஞ்சிடுவேன் வெளியே போ'.. திருவாரூர் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி ஆவேசம்.. வீடியோ
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள வாடிக்கையாளர்களை பார்த்து அந்த பெண் அதிகாரி அறைஞ்சிடுவேன் வெளியே போ என்று பேசுவது போல் வீடியோ உள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு மகளிர் சுய உதவி குழுவினர் சிலர் கடன் வாங்குவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, வங்கிக் கிளையில் பணியில் இருந்த பெண் அதிகாரி, பொதுமக்களை எழுந்து வெளியே போகச் சொல்லி தரக்குறைவாக பேசினாராம்.

அவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அந்த பெண் அதிகாரி, அங்கிருந்தவர்களை பார்த்து, நீங்கள் எல்லாம் மிருகங்களா.. எதுக்கு சிரிக்குற.. அறைஞ்சுடுவேன்.. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.. எழுந்திருச்சு எல்லாரும் வெளியே போ.. எல்லாரும் வெளியே போனால் தான் கிடைக்கும். இல்லாவிட்டால் கிடையாது.. வெளியே போங்க எல்லாரும்.. இங்கு கத்திக்கொண்டிருப்பர்கள் எல்லாரும் பைத்தியமா " என்று கேட்பதாக வீடியோ உள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி வாடிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய வீடியோ #iob #bank #Thiruvarur pic.twitter.com/kte9urW2DO
— velmurugan (@velmurugantheni) November 20, 2024
பொதுவாக சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எந்த சேவைக்காக சென்றாலும், அங்கு வாடிக்கையாளர்களிடம் ஒரு சில ஊழியர்கள் சரியான மரியாதை கொடுப்பது இல்லை என்றும், அலைகழிக்க வைப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். நகைக்கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன் என பல்வேறு சேவைகளின் போதும் முறையான தகவல்கள் கிடைக்காமல் தவிப்பதாக பலரும் ஆதங்கங்களை பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications