திருவாரூரில் 10000 மின் கட்டணம்.. இன்று 700 ரூபாய்.. சோலார் குறித்து கலெக்டரிடம் நெகிழ்ந்த மக்கள்
திருவாரூர்: திருவாரூர் அருகே வீடுகளுக்கான மானிய சோலார் மின் இணைப்புகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஜமால் என்ற பயணி கலெக்டரிடம் கூறுகையில், "மின் கட்டணமாக பல ஆயிரங்கள் கட்டி வந்த நிலையில் தற்போது குறைந்த பட்ச மின் தொகையை மட்டுமே பெறுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் ஒரு வார காலத்திற்குள்ளேயே மானிய பணமும் ஏறிவிடுகிறது" என மகிழ்ச்சி தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்சார வாரியம் மூலமாக மின் நுகர்வை குறைக்கும் வகையில் சோலார் பேனல் மூலமாக வீடுகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி வீடுகளுக்கு சோலார் (சூரிய மின்சக்தி) இணைப்பு பெறுவது இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறந்த முதலீடு மற்றும் வரப்பிரசாதம் ஆக பார்க்கப்படுகிறது. வீடுகளில் சோலார் பொருத்துவதன் மூலம் பொதுமக்கள் மாதாந்திர மின் கட்டணத்தை 70% முதல் 90% வரை குறைக்க முடியும். பகல் நேரத்தில் உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை அரசுக்கு வழங்கும் 'நெட் மீட்டரிங்' வசதி மூலம், இரவு நேர மின்தேவையை ஈடுகட்ட முடிகிறது.

பிஎம் சூர்ய கர்
மத்திய அரசின் 'பிஎம் சூர்ய கர்' திட்டத்தின் கீழ் 2 kW வரை ஒரு கிலோவாட்டிற்கு சுமார் ₹30,000 மானியம் வழங்கப்படுகிறது. 3 kW மற்றும் அதற்கு மேல்: மொத்தமாக அதிகபட்சமாக ₹78,000 வரை மானியம் கிடைக்கும். இது ஆரம்பக்கட்ட முதலீட்டுச் சுமையை பெருமளவு குறைக்கிறது. இதனால் பலரும் சோலார் பேனலை மாட்டி வருகிறார்கள். மத்திய அரசின் இந்த திட்டம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சோலார் பேனல்
சோலார் அமைக்க நீங்கள் செலவிடும் தொகை, அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் நீங்கள் சேமிக்கும் மின் கட்டணத்தின் மூலமே ஈடுகட்டப்பட்டுவிடும். அதன் பிறகு அடுத்த 20 ஆண்டுகளுக்கு மின்சாரம் கிட்டத்தட்ட இலவசம் போல் இருக்கும் என்பதால் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சோலார் பேனல் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் அருகே புலிவலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த என்பவரது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சோலார் பேனலை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
மின் கட்டணம்
தொடர்ந்து பயனாளியிடம் மின் கட்டணம் பயன் தருகிறதா என கேட்டறிந்தார். அப்போது பயனாளி ஜமால் கூறுகையில், "மின் கட்டணமாக பல ஆயிரங்கள் கட்டி வந்த நிலையில் தற்போது குறைந்த பட்ச மின் தொகையை மட்டுமே பெறுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் ஒரு வார காலத்திற்குள்ளேயே மானிய பணமும் ஏறிவிடுகிறது" என தெரிவித்தார்.
மின் கட்டணம்
இதேபோன்று வேலங்குடி பகுதியில் ஒருவரது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சோலார் பேனலை ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து மின் கட்டணம் பயன் தருகிறதா என கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கூறுகையில், "தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக வீடுகளுக்கு மானிய விலையில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் பேனல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் பயனாளிகளுக்கு 2,78,000 பணம் செலுத்தினால் 78 ஆயிரம் மானியம் உடனடியாக வங்கி மூலம் பயனாளிக்கு செலுத்தப்படுகிறது.
700 ரூபாய் மின் கட்டணம்
தற்போது கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட சோலார் பேனல் மூலமாக மாதம் 9 ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது அறநூறு ரூபாய் முதல் 700 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார் . எனவே பொதுமக்கள் அனைவரும் சோலார் பேனலை பெற்று பயன் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் லதாமகேஸ்வரி, செயற்பொறியாளர் செந்தமிழ்செல்வி , உதவி பொறியாளர் பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications