திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரிசியில் புழுக்கள்.. பழைய பிரெட்.. கிழிந்த துணிகள்.. அரசு இதுக்கு நிவாரணம் கொடுக்காமலே இருக்கலாம்!

கஜா புயல் நிவாரணத்திற்காக அரசு உருவாக்கி உள்ள முகாம்களில் கொடுக்கப்படும் அரிசிகளில் புழுக்கள் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா நிவாரண முகாம்களில் அரசு வழங்கிய அரிசியில் புழுக்கள்- வீடியோ

    மன்னார்குடி: கஜா புயல் நிவாரணத்திற்காக அரசு உருவாக்கி உள்ள முகாம்களில் கொடுக்கப்படும் அரிசிகளில் புழுக்கள் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது. மக்கள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.

    தஞ்சாவூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    நாகைக்கு அடுத்தடுத்து அடி.. புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் விபத்தில் சிக்கி பலி நாகைக்கு அடுத்தடுத்து அடி.. புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் விபத்தில் சிக்கி பலி

    கிழிந்த துணிகள்

    கிழிந்த துணிகள்

    இந்த நிலையில் அரசு ஏற்பாடு செய்திருக்கும் பல கஜா புயல் நிவாரண முகாம்களில் மிக மோசமான நிலையிலேயே துணிகள் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட போர்வைகள் கிழிந்து, பூஞ்சைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கஜா புயல் பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மோசமான உணவுகள்

    மோசமான உணவுகள்

    அதேபோல் இந்த முகாம்களில் உணவுகள் எங்கும் நல்ல நிலையில் இல்லை. புழுக்கள் நிறைந்த அரிசிகளில் உணவு சமைத்து கொடுத்து இருக்கிறார்கள். மிகவும் பழைய பிரெட்டை நிவாரணமாக வழங்கி இருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

    எங்கு இப்படி

    எங்கு இப்படி

    டெல்டா மாவட்டங்களில்தான் இந்த அவல நிலை அரங்கேறி உள்ளது. முக்கியமாக அரசு, மன்னார்குடி, திருவாருர், ஒரத்தநாடு, பாலையூர், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் அமைத்து இருக்கும் முகாம்களில்தான் இந்த அவலநிலை இருக்கிறது. அங்கு இருக்கும் மக்கள் இன்னும் புயல் பாதிப்பில் இருந்தே வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இந்த புயல் காரணமாக ஏற்கனவே காய்ச்சல்கள் பரவி வருகிறது. கொசுக்கள் இருப்பதால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இத்தனைக்கும் மத்தியில் முகாம்களில் சுகாதரமற்ற உணவுகள் கொடுப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Old Food with Insects: The worst case scenario Gaja Storm relief camp.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X