பட்டா மாறுதல்.. சுற்றிலும் அத்தனை பேர்.."அசிங்கமாக" சிக்கிய திருவாரூர் விஏஓ சுதா.. இதெல்லாம் தேவையா?
திருவாரூர்: போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும்கூட, சில அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டு விடுவார்கள்.ஒரு நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது என்பதால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது. இந்த போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஆள்மாறாட்டம்: அந்தவகையில், ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் மோசடி பேர்வழிகள் பலரும் சிக்கி வருகிறார்கள்.

அதேபோல, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, http://ecview.tnreginet.net/ என்ற வசதியும் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது. அப்படியிருந்தும்கூட, போலி பட்டா தயாரிப்புகளும், மோசடி ஆவணங்களும் உலா வருகின்றன... சில நாட்களுக்கு முன்புகூட, பட்டா மாற்றுவதற்கு லஞ்சம் கேட்டிருக்கிறார் குடியாத்தம் அக்ரஹாரம் விஏஓ.
தேன்மொழி: அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ஜெயமுருகன் (38), கிராம நிர்வாக உதவியாளராக இருப்பவர் தேன்மொழி.. இவர்கள் 2 பேரும், விவசாயி ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.
தான் ஒரு விவசாயி, அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கதறியும், லஞ்சம் கொடுத்தால்தான், வேலை நடக்கும் என்று விஏஓ கறாரா சொன்னாராம். கடைசியில், விஏஓ ஜெயமுருகன், தேன்மொழி இருவருமே கைதானார்கள். இதோ இப்போதும் ஒரு அதிகாரி கைதாகியிருக்கிறார்.
பெயர் மாற்றம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வசிப்பவர் சுதா.. 42 வயதாகிறது.. இவர், கொரடாச்சேரி பெருமாள் அகரம் கிராம நிர்வாக அலுவலராக வேலைபார்த்து வருகிறார்.. இந்நிலையில், கிருஷ்ணகோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மதியழகன் என்பவர், தன்னுடைய நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், இந்த பட்டாவை மாற்றவேண்டுமானால், அதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரும்படி விஏஓ சுதா கேட்டுள்ளார்.. இந்த லஞ்சப்பணத்தை தருவதற்கு மதியழகன் ஒப்புக்கொள்ளவில்லை..
அதிரடி கைது: அதனால், திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.. போலீசாரின் ஆலோசனை பேரில் ரசாயனம் தடவிய ரூ.6ஆயிரத்துடன், விஏஓ ஆபீசுக்குள் நுழைந்தார் மதியழகன். அங்கிருந்த விஏஓ சுதாவிடம் சென்று, லஞ்சப்பணத்தை மதியழகன் தந்ததுமே, மறைந்திருந்த போலீசார், விஏஓ சுதாவை பிடித்து கைது செய்தனர். ஒரு அதிகாரியே, அதுவும் பெண் அதிகாரியே லஞ்சம் வாங்கி சிக்கியிருப்பது, அதிர்ச்சியை தந்துள்ளது..
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications