இருளில் மூழ்கிய திருவாரூர்.. மாவட்டம் முழுக்க மின் விநியோகம் பாதிப்பு எனத் தகவல்
திருவாரூர்: இப்போது மாநிலத்தில் கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது. இரவிலும் பல இடங்களில் புழக்கமான நிலையே இருக்கிறது. இதற்கிடையே திருவாரூர் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் திருவாரூர் மாவட்டம் முழுக்க மின்தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை சீசன் நின்றது முதலே வெப்பம் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் மே மாதம் தான் வெப்பம் உச்சம் தொடும். ஆனால், இப்போது மார்ச் மாதமே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. தமிழ்நாட்டிலும் கூட இதே நிலை தான்.

வெப்பம்
கடந்த சில வாரங்களாகவே மாநிலம் முழுக்க வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது. இடையில் சில நாட்கள் மழை பெய்தாலும் கூட வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது. இன்று கூட சென்னை உட்பட மாநிலத்தில் மொத்தம் 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருந்தது.
மின்தடை
அதீத வெப்பம் காரணமாகக் காலை மட்டுமின்றி இரவு நேரங்களிலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் இரவு மின்விசிறி அல்லது ஏசி இல்லை என்றால் வீட்டிலேயே இருக்க முடியாது என்ற சூழலே இருந்து வருகிறது. இதற்கிடையே இப்போது திருவாரூர் மாவட்டம் முழுக்க மின்தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
என்ன காரணம்
திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் மின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே திருவாரூர் மாவட்டம் முழுக்க மின்தடை ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இரவு நேரத்தில் மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
எப்போது சீராகும்
மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை கண்டறிந்து அதைச் சரி செய்யும் பணிகளில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் மின் வினியோகம் சீராகும் என தெரிகிறது. ஏற்கனவே சில பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் மற்ற பகுதிகளில் மின் வினியோகத்தைச் சீராக்கத் தேவையான நடவடிக்கைகளை மின்வாரிய ஊழியர்கள் எடுத்து வருகிறார்கள்.
அதேநேரம் இதுபோல மீண்டும் மின்தடை ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உரிய பராமரிப்புப் பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் திடீரென இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications