கஜா புயல் மீட்பு பணிக்கு ராணுவத்தை அனுப்பாதது ஏன்? நிர்மலா சீதாராமன் சொல்வதை பாருங்க
Recommended Video

திருவாரூர்: கஜா புயல் மீட்புப் பணிகளுக்காக தமிழக அரசு ராணுவ உதவி கேட்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை பார்வையிட்டார்.
ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை கோடியக்கரைக்கு சென்ற நிர்மலா சீதாராமன், உப்பு உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மக்களுடன் சந்திப்பு
அதன் பின்னர் அங்கிருந்து வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளிக்கு சென்று, புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆற்காட்டுத்துறை, நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களை சந்தித்து, அவர்களுக்கு, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

வீடுகள் கட்டித்தருவோம்
புயலால் வீடுகளை இழந்துள்ளவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் வீடு கட்டித்தர மத்திய அரசு முடிவு செய்துள்ளாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ராணுவம் வரவில்லை
திருத்துறைப்பூண்டி, திருவாரூரிலும் நிர்மலா சீதாராமன் ஆய்வுகளை மேற்கொண்டார். திருவாரூரில் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் பேசுகையில், கஜா புயல் மீட்புப் பணிகளுக்காக, தமிழக அரசு ராணுவ உதவியை கேட்கவில்லை என்றார். ஒக்கி புயல், குரங்கணி காட்டுத் தீ பிரச்சினைகளின்போது தமிழக அரசு கேட்டதால் ராணுவம் வந்து உதவியது என்றும், இப்போது அப்படியான கோரிக்கையை மத்திய அரசுக்கு, தமிழக அரசு விடுக்கவில்லை என்றார்.

இப்போதும் ரெடி
இப்போது கேட்டாலும் ராணுவத்தை அனுப்ப தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications