மூதாதையர் வீட்டில் உதயநிதி ஸ்டாலின்! அமைச்சராக முதல் விசிட்! வருகை பதிவேட்டில் எழுதியது என்ன?
திருக்குவளையில் உள்ள மூதாதையர் வீட்டிற்கு விசிட் அடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திருவாரூர்: அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் கருணாநிதி, முரசொலி மாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதுமட்டுமல்ல கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருக்குவளையில் இருந்து, தாம் பிரச்சாரத்தை தொடங்கியதை செண்டிமெண்டாக அவர் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருவாரூர் வீதிகளில் செல்லும் போது நினைவெல்லாம் தனது தாத்தாவின் சிந்தனை தான் வந்தது எனக் கூறியுள்ளார்.

திருவாரூர் சுற்றுப்பயணம்
அமைச்சராகிய பிறகு முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அங்கு அவருக்கு உற்சாக மிகு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் திருக்குவளையில் உள்ள தனது மூதாதையர் வீட்டுக்கும் சென்றார் உதயநிதி. அங்கு அஞ்சகம் அம்மையார், கருணாநிதி, முரசொலி மாறன் உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது பற்றி செண்டிமெண்டாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வருகைப் பதிவேடு
''2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் துவக்கம் 2020 நவம்பர் 20 ஆம் தேதி தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லம் முன்பு தொடங்கி கைதானோம். இன்று அமைச்சராசி முதல் முறையாக மீண்டும் வருகை புரிந்துள்ளேன். பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம்.'' என்று வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

திருவாரூர் வீதிகள்
முன்னதாக அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், திருவாரூர் வீதிகளில் செல்லும் போது நினைவெல்லாம் தனது தாத்தாவின் சிந்தனை தான் வந்தது எனக் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல மக்கள் கடலாய் திரண்டு வந்து தன்னை வரவேற்க வந்தது நெகிழ வைத்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

பரிசளிப்பு
இதனிடையே ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மாநில அளவில் நடத்தப்பட்ட வில் வித்தை, நீச்சல், யோகா, உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருவாரூரில் வைத்து இன்று பரிசுகள் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications