திருப்பதிக்கு போறீங்களா? தரிசன டிக்கெட்டுடன் நேரா கவுன்ட்டருக்கு போங்க! எக்கசக்க லட்டை வாங்குங்கள்!
திருப்பதி: திருப்பதியில் தரிசன டிக்கெட்டுடன் லட்டு கவுன்ட்டருக்கு வந்தால் இன்று (செப்டம்பர் 2) முதல் எத்தனை லட்டுகளை வேண்டுமானாலும் அன்லிமிடெட்டாக வாங்கிக் கொண்டு செல்லலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் அறிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்பட்டால் ஒரு லட்டு ரூ 50 கொடுத்து பெறலாம். இதுவும் ஒரு ஆளுக்கு இத்தனை எக்ஸ்ட்ரா லட்டு என கட்டுப்பாடு உள்ளது.

இந்த நிலையில் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாகி சியாமளா ராவ், சாமி கும்பிட்ட தரிசன டிக்கெட்டுடன் லட்டு கவுன்ட்டருக்கு வரும் பக்தர்களுக்கு தலா ரூ 50 விலையில் அன்லிமிட்டெட்டாக எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வழங்கப்படும். இது இன்று முதல் (செப்டம்பர் 2) அமலுக்கு வருகிறது என்றார்.
சிலர் சாமி கும்பிடாமலேயே திருப்பதி மலைக்கு வந்து ஏராளமான லட்டுக்களை வாங்கிச் சென்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். சிலர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரும் நெருங்கிய உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறார்கள். பிரசாதமாக வழங்கப்படும் லட்டை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருமலை திருப்பதி ஏழுமலையானை காணச் செல்லும் பக்தர்கள் அங்குள்ள லட்டு கவுன்ட்டர்களில் ரூ 10, ரூ 50, ரூ 200 ஆகிய கட்டணம் செலுத்தி பக்தர்கள் லட்டு வாங்கிச் செல்வது வழக்கம். பல நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும் வகையில் இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது.
இந்த லட்டை வாங்க ஆதார் அட்டை கட்டாயம் என தேவஸ்தானம் குறிப்பிட்டிருந்தது. அதாவது ஒரு ஆதார் கார்டுக்கு அதிகபட்சமாக 2 லட்டுகளை வாங்கிச் செல்லலாம். சாமி தரிசனம் மேற்கொண்ட பிறகு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்படும்.
ஒரு ஆதார் அட்டைக்கு 1 இலவச லட்டு மற்றும் கூடுதலாக தலா ரூ 50-க்கு 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் நிறைய புரோக்கர்கள் லட்டுகளை வாங்கி வெளியே விற்பனை செய்வது தெரியவந்தது. இதனால்தான் லட்டுக்கு ஆதார் கட்டாயம் என்ற விதி அமலுக்கு வந்தது.
அது போல் லட்டு வாங்க தரிசன டிக்கெட்டை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் 48 முதல் 62 வரை உள்ள கவுன்ட்டர்களில் ஆதாரை பதிவு செய்து லட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இடைத்தரகர்களின் அட்டூழியத்திற்கு ஒரு முடிவு கட்டப்படும் என தெரிகிறது. சாமி கும்பிடாமல் வெறும் லட்டுக்காகவே பக்தர்கள் வருகிறார்கள் என்பதற்காகவும் தரிசன டிக்கெட்டை காண்பித்தால் லட்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தரிசன டிக்கெட்டை காட்டினால் ரூ 50-க்கு அன்லிமிடெட் லட்டு வழங்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications