திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ 300 டிக்கெட்டில் நூதன மோசடி! 3 பேர் கைது!
திருப்பதி: திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் ரூ 300 தரிசன டிக்கெட்டுகளில் மோசடி நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பண்டிகை காலம், விசேஷ காலம் என்றால் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு வருவார்கள்.

திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித, தோமலா உள்ளிட்ட சேவைகள் மூலமும் இலவச தரிசனம் மூலமாகவும் நடைப்பாதை எனப்படும் திவ்ய தரிசனம் , ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆகியவற்றில் தரிசிக்கலாம்.
அது போல் இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியும் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு சுற்றுலா பேக்கேஜ்களை அளிக்கிறது. அது போல் தமிழகத்திலும் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னையிலிருந்து கீழ் திருப்பதி, அங்கிருந்து மேல் திருப்பதி, தரிசனம், உணவு , மீண்டும் சென்னைக்கு ரிட்டர்ன் என தினமும் பக்தர்களை திருப்பதிக்கு ஒரு குறிப்பிட்ட பணத்தை பெற்றுக் கொண்டு அழைத்து செல்கிறது.
இந்த சுற்றுலா கழகங்களும் ரூ 300 தரிசன டிக்கெட்டுகளை மாதா மாதம் 24 ஆம் தேதி புக் செய்துக் கொள்கிறது. இதன் மூலம் ரயில்வேக்கும் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கும் வருவாய் கிடைக்கின்றன. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட் ஒருவர், ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் ஒருவர் ஆகியோர் திருப்பதி கோயிலில் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் இருக்கும் இரண்டு பேர் உள்பட 6 பேர் கூட்டணி அமைத்து ஒரு மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
சுற்றுலா வளர்ச்சி கழகங்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து இந்த மோசடியை செய்துள்ளனர்.
இந்த நூதன மோசடி குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்க, அவர்கள் உடனே விசாரணையில் இறங்கினர்.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட் ஒருவர், ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் ஒருவர், திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் இருக்கும் இரண்டு பேர் உட்பட ஆறு பேர் கூட்டணி அமைத்து ஒரு மோசடியை அரங்கேற்றியுள்ளனர்
சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து இந்த மோசடியை செய்துள்ளனர். இந்த நூதன மோசடி குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்க, அவர்கள் உடனே விசாரணையில் இறங்கினர்.
டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணிகளில் இருந்த ருத்ர ராஜு, அமர்த்தா யாதவ் உள்பட 3 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆந்திரா மாநில சுற்றுலா மேம்பாட்டு கழக ஊழியர் ஒருவர் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தது தெரியவந்தது. இந்த டிக்கெட்டுகளை வைத்து சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் , பக்தர்களை திருப்பதிக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது கோயிலில் ஸ்கேன் செய்யும் பணியில் ருத்ர ராஜு உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையடுத்து அவர்கள் அந்த டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து கோயிலுக்குள் அனுப்பினர். இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் வரை வருமானம் கிடைத்ததுடன், ஒரு டிக்கெட்டுக்கு ரூ 2500 வரை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருமலை போலீஸார் ருத்ர ராஜு உள்ளிட்ட மூவரை தேடி வருகிறார்கள். இது தொடர்பாக சென்னை டிராவல்ஸ் ஏஜென்ட், ஆந்திரா சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர் உள்பட மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications