திருப்பதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து! தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்!
அமராவதி: திருப்பதி ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.
திருப்பதி ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹிசார் எக்ஸ்பிரஸ் மற்றும் ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இரு ரயில்களின் தலா இரண்டு பெட்டிகளில் தீ பரவியுள்ளது.

ஆனால் தீ விபத்தில் நல்வாய்ப்பாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அருகே கச்சா எண்ணெய் ஏற்றி சென்றன சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீ விபத்து ஏற்பட்டது. 23 டேங்கர்களில் தீ பரவிய நிலையில், 8 டேங்கர்கள் தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. விபத்து ஏற்பட்ட இடத்தில் 200 மீ தொலைவுக்கு தண்டவாளம் மற்றும் ரயில் மின்சார கேபிள்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனை சரி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications