ட்விஸ்ட்! ஓணம் பம்பர் லாட்டரி.. 25 கோடி வென்றது கோவைக்காரர் இல்லை.. 4 அதிர்ஷ்டசாலிகள் இவர்கள் தான்!
திருப்பூர்: கேரள அரசின் ஓணம் பம்பர் குலுக்கில் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி கோவை அன்னூரை சேர்ந்தவர் முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது 4 பேர் சேர்ந்து வாங்கிய லாட்டரிக்கு பரிசு அடித்து இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. மாநில அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோக கிறிஸ்துமஸ் புத்தாண்டு, விஷு, ஓணம், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுகிறது.

அதில் ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியிடப்படும் லாட்டரி சீட்டில் முதல் பரிசுத்தொகை அடிக்கும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.25 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். இதனால், ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுக்களுக்கு கேரளாவில் தனி மவுசு உண்டு. கேரளா மட்டும் இன்றி தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட மக்களும் கேரளாவிற்கு சென்றால் லாட்டரியை வாங்குவதை பார்க்க முடிகிறது.
நடப்பாண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலுக்காக 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இதில் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தது. கடந்த ஆண்டு ஓணம் லாட்டரியில் 66 லட்சம் டிக்கெட்டுகளே விற்பனையான நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 9 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது. ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ. 25 கோடியும் இரண்டாம் பரிசாக 20 பேருக்கு ரூ.1 கோடியும் மூன்றாம் பரிசாக 20 பேருக்கு ரூ. 50 லட்சமும் அறிவிக்கப்பட்டது.
மொத்தமாக ரூ. 125 கோடிக்கு பரிசுத்தொகையாக வழங்கப்படும் என கேரள லாட்டரி துறை தெரிவித்தது. ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். லாட்டரி டிக்கெட்டுகள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்த குலுக்கல் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில், லாட்டரி எண் TE 230662 என்ற எண்ணுக்கு முதல் பரிசு அடித்தது. இந்த டிக்கெட் பாலக்காடு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவருக்கு இந்த டிக்கெட் கிடைத்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், இதுபற்றி உறுதியாக தெரியவில்லை. பரிசுத்தொகை விழுந்த லாட்டரி டிக்கெட்டுடன் லாட்டரி அலுவலகத்தை யாரும் அணுகதாததால் கேரள அரசும் பரிசு பெற்றவரை வலை வீசி தேடி வந்தது. இந்த நிலையில் தான் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் ஒன்றாக வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு பரிசுத்தொகை கிடைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த பாண்டிராஜ், நடராஜன், குப்புசாமி, ராமசாமி ஆகிய 4 பேரும் கூட்டாக வாங்கிய டிக்கெட்டிற்கு பரிசுத்தொகை விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அந்த டிக்கெட்டுடன் 4 பேரும் நேற்று திருவனந்தபுரம் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு நேரில் வந்து பரிசு வினியோக பிரிவில் ஒப்படைத்துள்ளனர்.
பாலக்காட்டில் சிகிச்சை பெற்று வந்த நபரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு திருப்பூர் திரும்பும் போது வாளையாரில் வாங்கிய 3 டிக்கெட்டில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்ததாக அவர்கள் லாட்டரி அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என லாட்டரி அலுவலகத்தில் அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு சில மலையாள சேனல்களில் தொலைபேசி வாயிலாக அவர்கள் அளித்த பேட்டியும் வெளியாகியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications