மோடி நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்து : எஸ்.பி வேலுமணி, சபாநாயகர் தனபால் பாதுகாப்பு வாகனங்கள் சேதம்
தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணியின் வாகனங்கள் விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 கார்கள் சேதமடைந்த நிலையில் டிரைவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது
திருப்பூர்: பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சபாநாயகர் தனபாலின் பாதுகாப்பு வாகனங்கள் தாராபுரம் அருகே விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 3 வாகனங்கள் சேதமடைந்தன. கார் டிரைவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து மோடி இன்று தாராபுரத்தில் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தாராபுரம் வேட்பாளர் எல். முருகன் உள்ளிட்ட 13 வேட்பாளர்களை ஆதரித்து மோடி வாக்கு சேகரிக்க உள்ளார். மோடி வருகையை முன்னிட்டு தாராபுரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மோடியுடன் ஒரே மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பங்கேற்று பேச உள்ளனர். இதற்கான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சபாநாயகர் தனபால் ஆகியோர் கார் மூலம் கோவையில் இருந்து தாராபுரத்திற்கு சென்றனர்.
தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணியின் வாகனங்கள் விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 கார்கள் சேதமடைந்தன. கார் டிரைவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காயமடைந்த கார் டிரைவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications