எச்சில் தொட்டு டிக்கெட் தந்த கண்டக்டர்.. டெஸ்டுக்கு தூக்கி சென்ற அதிகாரிகள்.. இப்படி ஒரு பிரச்சனையா?
திருப்பூர்: திருப்பூரில் எச்சில் தொட்டு டிக்கெட் தந்த அரசு பஸ் கண்டக்டரால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கி உள்ளது. மாநிலம் முழுக்க கொரோனா பரவல் காரணமாக மே, ஜூன் மாதங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அதன்பின் லாக்டவுன் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுக்க பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா
இந்த நிலையில் திருப்பூரில் எச்சில் தொட்டு டிக்கெட் தந்த அரசு பஸ் கண்டக்டரால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. கோவை-திருப்பூர் சென்ற அரசு பஸ்சில் கண்டக்டர் ஒருவர் எச்சில் தொட்டு டிக்கெட் தந்ததாக இன்று மக்கள் பலர் புகார் அளித்தனர். பேருந்து போக்குவரத்து கழகத்திடம் இது தொடர்பாக இன்று நிறைய பேர் புகார் அளித்தனர்.

சோதனை
இதையடுத்து அந்த குறிப்பிட்ட நடத்துனரை பேருந்து கழக அதிகாரிகள் இன்று கொரோனா டெஸ்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த நடத்துனருக்கு இன்னும் வேக்சின் போடப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் பல பயணிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கொடுத்துள்ளார். கோவை, திருப்பூர், ஈரோட்டில் இன்னும் கொரோனா பரவல் குறையாத நிலையில், இவர் இப்படி எச்சில் தொட்டு டிக்கெட் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா
இப்படி எச்சில் தொட்டு டிக்கெட் கொடுப்பதன் மூலம் இவருக்கோ அல்லது இவரின் மூலம் பலருக்கோ கொரோனா பரவல் அபாயம் உள்ளது. கொரோனா உள்ள நோயாளிக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு பின்னர் அதே விரலில் எச்சில் தொட்டு வேறு நபருக்கு டிக்கெட் கொடுப்பதன் மூலம் பலருக்கு இவர் கொரோனாவை பரப்பும் அபாயம் உள்ளது.

முடிவு
தற்போது இவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் டெஸ்ட் ரிசல்ட் வரவில்லை. தமிழ்நாடு பேருந்து போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் எல்லோருக்கும் இன்னும் கொரோனா வேக்சின் போடப்படவில்லை. கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் வரை மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது.

விரைவில்
விரைவில் ஊழியர்கள் எல்லோருக்கும் வேக்சின் போடும் வகையில் அரசு பணியாற்றி வருகிறது. கொரோனா காலம் என்பதால் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்க கூடாது என்ற விதி கடந்த வருடமே போடப்பட்டது. கிரிக்கெட்டிலும் எச்சில் தொட்டு பந்தை தேய்க்க கூடாது என்ற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications