எனக்கு பதவி கிடைத்தது தமிழ்நாட்டுக்கான பெருமை..ஜார்க்கண்ட் ஆளுநராகும் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
திருப்பூர்: தமக்கு பதவி கிடைத்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான பெருமை என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த பாஜக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி இன்று உத்தரவிட்டார்.
அருணாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கெய்வால்யா த்ரிவிக்ரம் பர்நாயக்-கும், சிக்கிம் மாநில ஆளுநராக லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யாவும், ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேச ஆளுநராக ஷிவ் பிரசாத் ஷுக்லாவும், அஸ்ஸாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியாவும், ஆந்திரப் பிரதேச ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நஸீரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநில ஆளுநராக இருந்த பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் மாநில ஆளுநராகவும், சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இருந்த சுஷ்ரி அனுஷியா உய்க்கே மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல. கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநில ஆளுநராக இருந்த பாகு சவ்ஹான் மேகாலயா ஆளுநராகவும், இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீகார் மாநில ஆளுநராகவும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ், மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும், அருணாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த டாக்டர். பி.டி. மிஸ்ரா லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் திங் கோஷ்யாரி மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் ராதா கிருஷ்ணன் மாத்தூர்-ரின் ராஜினாமாவை ஏற்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஆளுநராக தாம் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மீண்டும் ஒரு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ் இனம், கலாசார, பண்பாடு, மொழியின் மீது மகத்தான பாசம், மரியாதை, அன்பு வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில பழங்குடி இன மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பணியாற்றுவேன். இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான பெருமை. இதனால் ஜனாதிபதி, பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications