Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட மாநில தொழிலாளர்கள் அஞ்ச வேண்டாம்.. உதவி மையத்தில் அழைக்கலாம்..திருப்பூர் எஸ்.பி சஷாங்க் உறுதி

வட மாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்காக திருப்பூரில் பிரத்யேக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட எஸ்.பி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி சஷாங்க் கூறியுள்ளார். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரத்யேக உதவி மையம் திறக்கப்பட்டு அதற்கான தொலைபேசி எண்களும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி சஷாங்க் கூறினார்.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. வெவ்வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை எல்லாம் திருப்பூரில் நடந்ததாக தொகுத்து தகவல் பரப்பப்படுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Help Center in Tirupur for Northern State Workers says G. Shashank Sai IPS

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். மேலும் வடமாநில தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க வசதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் தனியாக மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவன உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சியர்,காவல்துறை கண்காணிப்பாளர் போலீஸ் கமிஷனர் ஆகியோர், வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி வாழ வகை செய்யப்பட்டுள்ளது என்றும், உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

Help Center in Tirupur for Northern State Workers says G. Shashank Sai IPS

இதனிடையே திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஷாங்க், மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சமீபகாலமாக தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதாலும் திருப்பூரில் தொழில் பாதிக்கப்படுவதாக பல்வேறு தொழில் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினிடம் தொடர்ந்து மனு அளித்திருந்தனர்.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய பிறகு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் , மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் , சமூக வலைதளங்களில் பரவுவது போல வட மாநில தொழிலாளர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் ஆட்சியர் வினீத் கூறினார்.

வடமாநில தொழிலாளர்களை தவறாக சித்தரித்து அதிகமாக மூன்று வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் ஒரு வீடியோ திருப்பூரில் கடந்த ஜனவரி மாதத்தில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தகராறின் போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு வீடியோக்கள் வேறு பகுதியில் நடந்தது. ஆனால் இவை அனைத்தும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்தது போல பரப்பப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வட மாநில தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏடிஎஸ்பி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

Help Center in Tirupur for Northern State Workers says G. Shashank Sai IPS

இவர்கள் வட மாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார். அதேசமயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்து தங்கள் புகார்களை தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொழி பிரச்சனை ஏற்படாதவாறு பல்வேறு மொழிகளை பேசக்கூடிய ஐந்து தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். அந்தந்த காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே தொடர்ந்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாநில தொழிலாளர்களுக்கு பிரத்யேக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. ஏதேனும் பிரச்சினையெனில் 94981-01300, 0421 - 2970017 என்ற சிறப்பு உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஷாங்க் கூறினார். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்.பி சஷாங்க் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து ஆலோசனை நடைபெற உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பீகார் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அலோக்குமார், பாலமுருகன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். இன்று மாலை சென்னை வரும் பீகார் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர், தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+