எதுக்கு இங்க நின்னு வீடியோ எடுக்கிறே.. போடா அந்தாண்ட.. லத்தியால் அடித்த எஸ்ஐ. மாலா!

மாஸ்க் அணியாத நபரை வசைபாடிய பெண் போலீஸ் எஸ்ஐயின் வீடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: "போடா அந்தாண்ட கருமம் புடிச்சவனுங்க.. மாஸ்க் போடலேன்னா கேஸ் போட சொல்லி இருக்காங்க" என்று மாஸ்க் அணியாத நபரை அதட்டும் பெண் போலீஸ் மாலாவின் வீடியோ வைராகிறது.. "இங்க நின்னு எதுக்கு வீடியோ எடுத்திட்டு இருக்கே என்று கேட்டு ஒரு நபரை லத்தியால் தாக்குவதை கண்டு பொதுமக்கள் அதிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Recommended Video

    எதுக்கு இங்க நின்னு வீடியோ எடுக்கிறே.. போடா அந்தாண்ட.. லத்தியால் அடித்த எஸ்ஐ. மாலா! - வீடியோ

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. எனினும் பாதிப்பு குறைவாக இருக்கும் போதிருந்தே, அனைவரும் மாஸ்க் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

     lockdown: tiruppur woman si threaten public in police station goes viral

    வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. மாஸ்க் அணியாவிடில் வாகனங்களின் அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அப்படி பறிமுதல் செய்யப்படும் வானங்களை 3 மாதங்களுக்கு திரும்ப பெற முடியாது எனவும்கூட சொல்லி பார்த்தாகிவிட்டது.

    ஆனால் இன்னமும் நிறைய பேர் அசால்ட்டாக உள்ளனர்.. அலட்சியமாக மாஸ்க் இல்லாமல் நடமாடுகிறார்கள்.. அவர்களை போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் 2 இளைஞர்கள் மாஸ்க் அணியாமல் வரவும் அவர்களை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தார்... அவரை மட்டும் இல்லை, இந்த வீடியோவை எடுத்தவர்களையும் மிரட்டி தாக்கினார் ஒரு பெண் போலீஸ் எஸ்.ஐ!!

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் மாலா.. இவர் முத்தூர் அருகே ஈரோடு செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மாஸ்க் அணியாமல் 2 பேர் பைக்கில் வந்தனர்.

    அவர்களை மடக்கி நிறுத்திய எஸ்ஐ மாலா, 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்... இதனால் அதிர்ந்துபோன 2 பேரும் எஸ்ஐ மாலாவுடன் வாக்குவாதம் செய்தனர்.. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் மாலா அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தார். இதனை எதிர்பாராத அந்த 2 பேரும் மீண்டும் மீண்டும் வாக்குவாதம் செய்தபடியே நின்றனர்... ஒரு கட்டத்தில் கெஞ்சம் ஆரம்பித்தனர்.

    "மாஸ்க் போடலேன்னா கேஸ் போட சொல்லி இருக்காங்க.. போடா அந்தாண்ட கருமம் புடிச்சவனுங்க.. போடா அந்தாண்டை.. சும்மா நொய்..நொய்..ன்னு பேசினதையே பேசிட்டு.. கிளம்பு" என்று அதட்டுகிறார் மாலா. இதனை மற்றொரு நபர் வீடியோவாக தன்னுடைய செல்போனில் எடுத்து கொண்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த மாலா, இங்க நின்னு எதுக்கு வீடியோ எடுத்திட்டு இருக்கே என்று கேட்டு அந்த நபரை லத்தியால் தாக்குகிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+