திருப்பூரில் வீரமணி வந்த கார் கண்ணாடி உடைப்பு.. இந்து முன்னணியினர் மீது தடியடி
திருப்பூர்: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க திருப்பூர் வந்த திராவிடர் கழக தலைவர் வீரமணியின் கார் கண்ணாடியை உடைத்து எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக, காங்கிரஸ் மற்றும இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கார் கண்ணாடி உடைப்பு
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திருப்பூர்- தாராபுரம் சாலையில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜின் காரில் திராவிடர் கழக தலைவர் வீரமணி வந்துள்ளார். அப்போது இந்து முன்னனியினர் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தயாக கூறப்படுகிறது. இதில் அந்த காரின் கண்ணாடி உடைந்தது.

வீரமணிக்கு பாதுகாப்பு
இதனால் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் இந்து முன்னணியினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.அதன் பின்னர் பாதுகாப்பாக பிரச்சாரம் நடந்த கரட்டாங்காடு பகுதிக்கு வீரமணி வந்தடைந்தார். இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

வீரமணி விமர்சனம்
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கி.வீரமணி தமிழகத்தில் ஒன்று மதசார்பற்ற கூட்டணி மற்றொன்று ஆவியும் காவியும் சேர்ந்த கூட்டணி என்று கடுமையாக விமர்சித்தார்.. பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பேசிய வீரமணி, தோல்வி பயத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் பாஜக கூட்டணி கலவரத்தை தூண்டிவிடும் வகையில் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

தி.க. போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் பெரியார் சிலை நேற்று அதிகாலை உடைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்தது. இதற்காக சென்னையில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இந்து முன்னணியினர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியிலும் கி.வீரமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications