புளிய மரத்தில் 15 நாட்களாக தொங்கிய காதலர்கள்.. அதென்ன உலர்ந்து கிடக்கு? ஒரே கோத்திரம் தந்த காதல் பரிசு
திருப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று அம்மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.. வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் இருந்தும், இந்த ஜோடி எதற்காக இப்படி யோசித்தார்கள்? என்று கவலையுடன் கேட்கிறார்கள்.. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வந்த போதிலும், சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.. என்ன நடந்தது ராஜஸ்தானில்?
துங்கர்பூர் மாவட்டத்தில் வர்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது மாண்டவ் என்ற கிராமம்.. இந்த கிராமத்தை ஒட்டி காட்டுப்பகுதி உள்ளது.. இந்த காட்டுக்கு கிராம மக்கள் சிலர் விறகு சேகரிக்க சென்றிருக்கிறார்கள்.. அப்போது கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது..

விறகு சேகரிக்க சென்ற மக்கள்
இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், காட்டுக்குள் உள்பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.. அங்கே ஒரே மரத்தில் 2 பேரின் உடல்கள் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்..
அந்த உடல்கள் பல நாட்களாக தொங்கியிருந்ததால், உடம்பெல்லாம் உலர்ந்து போய் காணப்பட்டது.. மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன.. உடனே கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மரத்தில் தொங்கியிருந்த இரண்டு உடல்களையும் மீட்டனர்.
மரத்தில் 15 நாட்கள்
எப்படியும் இவர்கள் இறந்து சுமார் 15 நாட்களாவது இருக்கும் என்றும் உடல்கள் மோசமாக சிதைந்திருந்ததால் அடையாளம் காண்பது சிரமம்தான் என்றும் முதல்கட்ட விசாரணையில் கூறினார்கள்..
இதற்கு பிறகு இறந்து போன 2 நபர்களும் யார் யார் என்பது குறித்த அடுத்தக்கட்ட விசாரணை விரிவடைந்தது..
அப்போதுதான் இறந்தவர்கள் ஒரு காதல் ஜோடி என்பது தெரியவந்தது.. இவர்கள் ஒரே பகுதியைச் சேர்ந்த இளம் காதலர்கள் ஆவர்.. இருவரும் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தங்களது வீடுகளிலிருந்து காணாமல் போயிருந்தனர். அவர்களின் குடும்பத்தினர் இவர்களை தினமும் தேடிவந்துள்ளனர்.. ஆனால் இவர்களை பற்றி எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை... பிறகுதான் இங்கு வந்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது..
ஒரே கோத்திரம் - காதல் ஜோடி
இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி ரிட்வான் கான் சொல்லும்போது, இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்திலுமே எதிர்ப்பு இருந்து வந்துள்ளது.. இருவரும் ஒரே "கோத்திரத்தை" சேர்ந்தவர்கள் என்பதால், பாரம்பரிய காரணங்களால், இவர்களின் உறவை குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர்.. இதனால் இருவரும் மனதளவில் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வந்துள்ளனர்..
குடும்ப எதிர்ப்பை தாங்க முடியாமல், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காட்டுப் பகுதிக்கு சென்று, ஒரே மரத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.. இருந்தாலும் இது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்தால்தான் உறுதி செய்யப்படும் என்றார்.
காதலர்கள் தொங்கிய மரம்
இதையடுத்து சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறை, குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு 2 உடல்கள் மீட்கப்பட்டு, சாகவாரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. அங்கு இனிமேல்தான் போஸ்ட் மார்ட்டம் நடக்க போகிறது..
காதலர்கள் 2 பேருமே வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதால், எங்காவது மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று குடும்பத்தினர் நினைத்த நிலையில், இப்படி அநியாயமாக இறந்துவிட்டதை கண்டு, கதறி அழுது கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் 2 அப்பாவி உயிர்கள் பலியானதற்கு காரணம் சமூக கட்டுப்பாடுகள் தான் என்று பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்...!!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications