உலகளவில் டிரென்டான நேசமணி.. இப்போது டீசர்டிலும்.. திருப்பூரில் தயாரிப்புகள் ஜரூர் #PrayforNeasamani
Recommended Video
திருப்பூர்: உலகளவில் டுவிட்டரில் டிரென்டான நேசமணி இப்போது திருப்பூரில் டிசர்ட்டிலும் டிரென்ட் ஆகி வருகிறார்.
கடந்த 30-ஆம் தேதி சிவில் என்ஜினியரிங் லேர்னர்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் படத்தை போட்டு இதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர் சொல்வார்கள் என ஒருவர் துபாயில் உள்ள விக்னேஷ் பிரபாகரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவரோ இதன் பெயர் சுத்தியல். இதுதான் பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து டங் டங் என சத்தம் கேட்டு அவரது மண்டை உடைந்தது என வடிவேல் காமெடியை கூறியுள்ளார்.

ஹேஷ்டேக்
இதையடுத்து அந்த நண்பரும் நேசமணி இப்போது எப்படி உள்ளார் என கேள்வி கேட்க அதற்கு விக்னேஷ் Pray for Neasamani என கூறியதன் மூலம் உருவான ஹேஷ்டேக் பிரபலமானது.

பாஜக புகார்
இது டுவிட்டரில் உலக அளவில் டிரென்டாகியது. இது போல் ஒரு ஹேஷ்டேக்கை டிரென்ட்டாகியதன் மூலம் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவே மறக்கடிக்கப்பட்டது என சொல்லலாம். இதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

ஜரூர்
இந்த நிலையில் டிரென்ட்டாகும் அனைத்து ஆன்லைனில் சக்கை போடு போடும் என்பதால் திருப்பூரில் நேசமணி டீசர்ட் உருவாக்கும் பணிகள் ஜரூராக உள்ளன.

சூடுபிடிக்கும்
அதில் நேசமணியின் அவுட்லைன் படத்தை போட்டு தலையில் சுத்தி விழுவது போல் இருக்கிறது. கீழே Pray for Neasamani என எழுதப்பட்டுள்ளது. இந்த டீசர்ட்டுகள் நிச்சயம் விற்பனையிலும் சூடுபிடிக்கும் என்றே தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications