Exclusive: ஆஸ்திரேலியாவிலிருந்து நித்யானந்தா பாணியில் விளக்க வீடியோ அனுப்புகிறாராம் மகாவிஷ்ணு!
திருப்பூர்: சென்னையில் அசோக் நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகாவிஷ்ணு விரைவில் விளக்க வீடியோவை அனுப்புவார் என அவரது அறக்கட்டளை பெண் நிர்வாகி ஒருவர் ஒன் இந்தியா தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வகையில் மகாவிஷ்ணு பேசியது தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதாவது போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும், ஏழைகளாகவும் பிறக்கிறார்கள் என சிறிதும் பகுத்தறிவே இல்லாமல் ஒரு விஷயத்தை மகாவிஷ்ணு பேசியதாக வீடியோ வைரலாகியுள்ளது.

பார்வையற்ற ஆசிரியர் ஒருவரை வைத்துக் கொண்டே மகாவிஷ்ணு இவ்வாறு பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த ஆசிரியர் எதிர்த்த போது கூட அவரை அறிவற்றவர் என மகாவிஷ்ணு விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மகாவிஷ்ணுவை விடமாட்டேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.
மேலும் மகாவிஷ்ணுவை கைது செய்ய கோரி மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். மகாவிஷ்ணுவின் பேச்சு அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க செய்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து திருப்பூர் குத்தம்பாளையத்தில் உள்ள மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளையின் தொலைபேசி எண்ணுக்கு ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பில் தொடர்பு கொண்டோம். அப்போது எதிர்முனையில் பெண் சிஷ்யை ஒருவர் பேசினார்.
அவரிடம் மகாவிஷ்ணு எங்கே இருக்கிறார் என நாம் கேட்ட போது , "அவர் வெளிநாட்டில் இருக்கிறார்" என்றார். அவரை எப்படி தொடர்பு கொள்வது என கேட்ட போது, "அவருடைய எண் எனக்கு தெரியாது, மூத்த நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.
சென்னை அரசு பள்ளியில் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் மகாவிஷ்ணு பேசியுள்ளார். ஆனால் அது குறித்து அவர் தரப்பில் யாருமே விளக்கமளிக்கவில்லையே என கேட்டோம். அதற்கு அவர் முதலில் எந்த விஷயம் என புரியாத படியே கேட்டார். பிறகு நாம் விளக்கியதை அடுத்து இதுகுறித்து மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து விளக்கம் கொடுப்பார் என அந்த பெண் சிஷ்யை தெரிவித்துள்ளார்.
அதாவது ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள மகாவிஷ்ணு, இந்த சர்ச்சை ஏற்படும் என்பதற்காக முன் கூட்டியே சென்றுவிட்டாரா இல்லை ஏதாவது நிகழ்வுக்காக சென்றாரா என தெரியவில்லை. எனினும் அவர் விரைவில் நித்யானந்தா பாணியில் வீடியோவில் விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications