உடுமலைப்பேட்டையில் தனியார் பாரில் பொதுமக்கள் நடத்திய தரமான சம்பவம்.. கையோடு செய்ததுதான் ஹைலைட்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போதை ஆசாமிகளால் அடிக்கடி இடையூறு ஏற்பட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், தனியார் மதுபான விற்பனைக்கூடத்தை அடித்து நொறுக்கினார்கள்.. மேலும் டாஸ்மாக் மற்றும் 2 மதுபானக்கூடங்களை அகற்ற வேண்டும் என்று மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை யு.எஸ்.எஸ்., காலனி பகுதியில் உடுமலை-தாராபுரம் சாலையிலிருந்து 2 இணைப்பு சாலைகள் இருக்கிறது. இந்த சாலைகளில் அரசு டாஸ்மாக் கடை மற்றும் 2 தனியார் மதுபான விற்பனை நிலையங்கள் இருக்கின்றன.

இந்த மூன்று மதுக்கடைகளுக்கும் வரும் குடிமகன்கள், அடிக்கடி மதுபோதையில் அடாவடியில் ஈடுபடுகிறார்கள். போதை ஆசாமிகள் அந்தப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான விற்பனை கூடங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள்..
இந்த நிலையில் தனியார் மதுபான கூடத்திற்கு வந்த ஆசாமி போதையில் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அசிங்கமான செயல்களை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனியார் மதுபான விற்பனை கூட மேலாளரை அணுகி விவரத்தை கூறினாராம்.. அப்போது தனியார் மதுபானக்கூடத்தைச் சேர்ந்தவருக்கும், அந்த வாலிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தனியார் மதுபான விற்பனை கூடத்தில் பணிபுரியும் சிலர் அவரை சரமாரியாக தாக்கினார்களாம் இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஆத்திரத்துடன் தனியார் மதுபான கூடம் முன்பு குவிந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்களை மதுபான கூட ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தின் போது தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி உள்ளார்கள்.
அத்துடன் அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வருகை தந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தனியார் மதுபானக்கூடத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் உடுமலைப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications