Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தட்டி தூக்கிய ஸ்டாலின்.. வைத்திலிங்கம் அத்தனை நெருக்கடியிலும் கூடவே இருந்தாரே? ஓபிஎஸ் வருந்துவாரா

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: மூத்த தலைவர் வைத்திலிங்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.. திமுகவின் பல கால முயற்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.. வைத்திலிங்கத்தின் இந்த மனமாற்றத்திற்கும், கட்சி தாவலுக்கும் யார் காரணம்? இதன் பின்னணி என்ன? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

ஆரம்ப காலத்தில் இருந்தே சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர் வைத்திலிங்கம்.. சசிகலா சமூகத்தை சேர்ந்தவர்.. டெல்டா மண்ணை சேர்ந்தவர்..

Queen Maker Edappadi Palaniswami Vaithilingam

ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர்.. அதிமுகவின் 7 மாவட்டங்களுக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர்..

டாப் 5 தலைவர்கள்

ஜெ. அமைச்சரவையில் அன்றைய டாப் 5 முக்கிய தலைவர்களில் 3வது இடத்தில் இருந்தவர் வைத்திலிங்கம்.. எடப்பாடி பழனிசாமியே, இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தார்..

இரட்டை விவகாரம் ஜெயலலிதா மறைவு, சசிகலா ஜெயில், ஓபிஎஸ் இரட்டை தலைமை விவகாரம் என அன்று அதிமுக பரபரத்தபோது, வைத்திலிங்கம் நிலைமை என்னாக போகிறதோ என்று டெல்டா அதிமுக கவலைப்பட்டது.. ஆனாலும், ஓபிஎஸ் இவரை அப்போது கைவிடவில்லை.. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்து, டெல்டா அதிமுகவை நிமிர வைத்தார்.. அப்போது முதல் ஓபிஎஸ் ஆதரவாளராகவே தன்னை காட்டிக்கொண்டு வந்தார் வைத்திலிங்கம்.

எடப்பாடி பழனிசாமி

இதற்கு காரணம், எப்படியும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தனக்கு எம்பி பதவி கிடைக்கும் என்று கனவு கண்டார் வைத்திலிங்கம் .. ஆனால், ஓபிஎஸ் மகனுக்கு அந்த வாய்ப்பு சென்றுவிடவும் அப்செட் ஆகிவிட்டார்.. அதேபோல, தென்மண்டங்களைவிட, கொங்கு மண்டலத்தையே எடப்பாடி அரசு அன்று தூக்கி வளர்த்ததும், வைத்திலிங்கத்தின் அதிருப்திக்கு இன்னொரு காரணமானது... அதனால் கொங்குவிலும் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட முயற்சி செய்தார்..

ஆனால், அதற்குள் வைத்திலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கட்டிட அனுமதி வழங்குவதற்காக ரூ. 27.9 கோடி லஞ்சம் பெற்றதாக ஊழல் எதிர்ப்பு பதிவானது.. இதற்கு கொங்குவில் உள்ள அந்த சீனியரின் உள்ளடி வேலைதான் காரணம் என்ற ஆத்திரம், வைத்திலிங்கத்துக்கு இன்னும் அதிகமானதாக சொல்லப்பட்டது.. அந்த கருப்பு ஆடு யார் என்பதை அறிந்து மேலும் கொந்தளித்தார்.. இதற்கு பிறகுதான், ஓபிஎஸ் பக்கமே உறுதியாகவும், பக்கபலமாகவும் நின்றார் வைத்திலிங்கம்.

ஒரத்தநாடு வைத்திலிங்கம்

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் பக்கம் வைத்திலிங்கம் உறுதியாக இருப்பதை உணர்ந்துகொண்ட எடப்பாடி தரப்பும், தன் வேலையை காட்டியது.. வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை காமராஜரை வைத்து காய் நகர்த்த துவங்கியது..

அதற்கேற்றவாறு வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் மாஜி எம்எல்ஏக்கள் திருவையாறு ரத்தினசாமி, கும்பகோணம் ராம.ராமநாதன், பட்டுக்கோட்டை சி.வி.சேகர், பேராவூரணி கோவிந்தராஜன், தஞ்சாவூர் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆகியோர் எடப்பாடி பக்கம் தாவியதை இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது..

ஆனாலும், வைத்திலிங்கம் அசரவில்லை. ஒரத்தநாடு மேட்டர் எடப்பாடிக்கு எதிரான அரசியலை செய்து, தஞ்சை டெல்டாவை தன்வசம் மட்டுமே வைத்திருக்க வைத்திலிங்கம் முடிவு செய்தார்..

டெல்டா ஓட்டு

அதுமட்டுமல்ல, கடந்த 2016 சட்டசபை தேர்தலில், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால், எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அவர்தான் முதல்வர் பதவியில் உட்கார்ந்திருப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. இந்த வருத்தமும் டெல்டாவுக்கு இப்போதும் உண்டு..

டெல்டா மற்றும் முக்குலத்தோர் சமுதாயத்தை வைத்தே அதிமுகவை நிமிர்த்திவிடலாம் என்ற நம்பிக்கை ஓபிஎஸ்ஸுக்கு இருந்ததால்தான், வைத்திலிங்கத்தை விடாமல் இறுக்கமாக தன்னுடைய கைக்குள்ளேயே வைத்திருந்தார்... எடப்பாடி Vs வைத்திலிங்கம் என்றுகூட களம் உருவாகலாம் என்றும் கணிக்கப்பட்டது..

இதற்கு பிறகு சசிகலாவுடன் வைத்திலிங்கம் இணைவதாகவும் செய்திகள் கசிந்தவாறே இருந்தன.. நேருக்கு நேர் நிகழ்வுகளில் சந்திக்கும் சூழலும் உருவானது.. ஆனால் அது மரியாதை நிமித்தமான, நலம் விசாரிப்பு சந்திப்பாகவே அவை இருந்தன..

கடைசிவரை விசுவாசம்

சசிகலா பக்கம் வைத்திலிங்கம் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும், வைத்திலிங்கத்துடன் நேரடியான மோதல் எதுவும் இல்லை என்பதாலும், வைத்திலிங்கத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவே செய்தார்..

அதுமட்டுமல்ல, வைத்திலிங்கம் தன் பக்கம் வந்துவிட்டால், டெல்டாவில் அதிமுகவின் வாக்கு வங்கியை அதிகரித்துவிடலாம் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டார்.. ஆனால், ஓபிஎஸ்ஸிடம் தொடர்ந்து விசுவாசம் காட்டி வைத்திலிங்கம், எடப்பாடியின் வலையில் கடைசிவரை சிக்கவில்லை..

ஆனால் திமுக சரியான காய்நகர்த்தலை 2 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்தது... ஆனால், ஓபிஎஸ் மீது வைத்திலிங்கம் வைத்திருந்த, விசுவாசத்தை பார்த்து, அதிமுகவை போலவே திமுகவும் மிரண்டு போனதாம்..

அளவுக்கு மிஞ்சின பொறுமை

இப்படி பலரும் முயற்சித்து சோர்ந்து போகும் அளவுக்கு ஓபிஎஸ்ஸின் மிகசிறந்த விசுவாசியாகவே இருந்தார் வைத்திலிங்கம்.. இன்று வைத்திலிங்கமே மனம் மாறி திமுகவுக்கு சென்றுள்ளார்...

எனினும் தன் மீது வைத்த மொத்த நம்பிக்கையையும் ஓபிஎஸ்ஸே கெடுத்து கொண்டுவிட்டார் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.. இத்தனை காலமும், "பாலமாகவும் - பலமாகவும்" இருந்த வைத்திலிங்கம் விவகாரத்தில் ஓபிஎஸ் கோட்டை விட்டுவிட்டாரா?

"மேலிடத்துக்காக" பதவி முதல் அதிகாரம், நிர்வாகிகள் என அனைவரையும் இழந்து, இன்று தனக்கிருந்த ஒரே விசுவாசியையும் இழந்துவிட்டாரோ ஓபிஎஸ்? என்றுதான் கேட்க தோன்றுகிறது... அளவுக்கு மிஞ்சினால் பொறுமைகூட ஆபத்துதான் போல...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+