Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக - அதிமுக கூட்டணியில் மல்லுக்கட்டு.. பாஜக - கம்யூனிஸ்ட் பிடிவாதம்.. திருப்பூர் தெற்கிற்கு குறி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பற்றி தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியை மையப்படுத்தி திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன.

tiruppur-south-tussle-starts-in-alliance-between-dmk-cpm-and-aiadmk-bjp-for-tiruppur-south

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வது தொடர்பாக பேச்சுசுவார்த்தையை தொடங்கி உள்ளது. அதேபோல் அதிமுகவிடமும் அதன் கூட்டணி கட்சியின் விருப்பமுள்ள தொகுதிகளின் பட்டியலை வழங்கி உள்ளனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி

இந்நிலையில் தான் திருப்பூர் தெற்கு தொகுதியை கைப்பற்ற இருகட்சிகளின் கூட்டணியிலும் கடும் போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2008 ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. முதல் முறையாக கடந்த 2011ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடந்தது.

அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே. தங்கவேல் வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டுத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ் குணசேகரன் வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் கே. செல்வராஜ் இரண்டாம் இடத்தையும், மக்கள் நல கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே. தங்கவேல் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

எனினும் 2021ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் கே. செல்வராஜ் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் திமுக கேட்டு கொண்டதால் கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதியை விட்டு கொடுத்தது.

கம்யூனிஸ்ட் குறி

ஆனால் இந்த முறை திமுகவிடம் திருப்பூர் தெற்கு தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உள்ளது. திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். அதுமட்டுமின்றி முந்தைய தேர்தல் வெற்றியை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தொகுதியை குறிவைத்துள்ளது.

இதனை அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் சி. மூர்த்தி உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ''கடந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் எங்களுக்கு எந்தத் தொகுதியும் கிடைக்கவில்லை. எனவே இம்முறை திருப்பூர் தெற்குத் தொகுதியை உறுதியாகக்
கேட்கிறோம். கடந்த முறை கூட்டணியின் நலன் கருதி நாங்கள் விட்டுக் கொடுத்தோம்" என்றார்.

திமுக எம்எல்ஏவும் ஆர்வம்

அதேவேளையில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் திமுகவின் கே செல்வராஜ் மீண்டும் களம் காண முயற்சித்து வருகிறார். இதற்கும் காரணம் இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்திலேயே முஸ்லிம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள தொகுதியாக திருப்பூர் தெற்கு உள்ளது. இதனால் இஸ்லாமியர்களின் வாக்குகளை வைத்து மீண்டும் வெற்றி பெற முடியும் என்று திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ கே செல்வராஜ் நம்புகிறார்.

கடந்த முறை வெற்றி பெற்றதற்கும் இஸ்லாமியர்களின் வாக்குகள் தான் காரணம். இந்த முறையில் போட்டியிட்டால் எளிதாக வெல்லலாம் என்று அவர் நினைக்கிறார். இதனால் தான் வரும் சட்டசபை தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக கே செல்வராஜ் விருப்பமனு வழங்கி உள்ளார். எம்எல்ஏ செல்வராஜ் திருப்பூர் நகர்ப்புற பகுதிகளில் திமுகவின் பிரபலமான முகமாக அறியப்படுகிறார். இருப்பினும் மாவட்ட உள்ளூர் அமைச்சர் எம்.பி. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாநகர மேயருடன் இவருக்கு கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.

திமுக - மா.கம்யூனிஸ்ட் குழப்பம்

மேலும், அண்மையில் குப்பைப் பிரச்சனை தொடர்பாக அவர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை செல்வராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், மாவட்டச் செயலாளர் என்ற முறையில் அவர் பரிந்துரைக்கும் ஒருவருக்கு திமுகவில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் உள்ளது. இது திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் பெரும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் யார்?

அதேபோல் அதிமுக கூட்டணியில் அதிமுகவும், பாஜகவும் இந்த தொகுதியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளன. அதிமுக சார்பில் கடந்த 2 தேர்தல்களில் போட்டியிட்ட குணசேகரன் காலமானார். இதனால் புதிய வேட்பாளரை அதிமுக தேடி வருகிறது.

மாஜி எம்எல்ஏ குணசேகரனின் மனைவி கவிதா, முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தன், கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன் உள்ளிட்ட சுமார் 20 பேர் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''கட்சி தலைமை யாருக்கு வாய்ப்பளித்தாலும் அவர்களின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம். பாஜகவும்'' என்றார்.

பாஜகவும் காய்நகர்த்தல்

இந்த நிர்வாகி கூறியது போல் அதிமுக கூட்டணியில் பாஜகவும் இந்த தொகுதியை கைப்பற்ற தீவிர முயற்சி செய்து வருகிறது. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் உள்பட சிலர் இந்த தொகுதியை குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபற்றி மூத்த பாஜக நிர்வாகி கூறுகையில், '' திருப்பூர் தெற்கு மட்டுமின்றி, திருப்பூர் வடக்கு மற்றும் பல்லடம் தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறோம். முருகானந்தம் உள்பட பல தகுதியான வேட்பாளர்கள் தொகுதிகளை கோரியுள்ளனர். முடிவு வெளிவர இன்னும் காத்திருக்க வேண்டும்'' என்றார். இதனால் திருப்பூர் தெற்கு தொகுதியால் கூட்டணியில் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையேயும், அதிமுக – பாஜக இடையேயும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

தொகுதி நிலவரம்

திருப்பூர் தெற்குத் தொகுதியில் மொத்தம் 289 வாக்குச் சாவடிகள் உள்ளன. இங்கு 1,93,614 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 94,579 வாக்காளர்களும், 99,011 பெண் வாக்காளர்களும், 24 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+