"நீங்க எப்படி ஆர்டர் போடலாம்".. மாட்டிறைச்சி தடை.. வட்டாட்சியர் சுப்பிரமணி தூக்கியடிப்பு.. அதிரடி!
திருப்பூர்: திருப்பூர் அருகே மாட்டிறைச்சி விற்கக் கூடாது என வியாபாரியை மிரட்டிய வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வட்டாட்சியர் சுப்பிரமணி மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்ய முயன்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி அருகே இருக்கும் கானங்குளம் கிராமத்தில் வேலுசாமி என்ற மாட்டிறைச்சி கடை உரிமையாளர் வீட்டில் வட்டாட்சியர் சுப்பிரமணி நேற்று ஆய்வு செய்தார்.
அவரின் வீட்டில் இருக்கும் மாடுகள் குறித்தும், மற்ற ஆடு, மாடு கோழிகள் குறித்தும் வட்டாச்சியர் சுப்பிரமணி ஆய்வு செய்தார்.

கூடாது
அப்போது வேலுசாமியை எச்சரித்த வட்டாட்சியர் சுப்பிரமணி, நீங்க ஆடு மாடு வேண்டுமானால் விற்கலாம். தப்பில்லை. ஆனால் மாட்டிறைச்சியை விற்க கூடாது. மாட்டிறைச்சி விற்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார். இதையடுத்து வேலுசாமி வட்டாச்சியர் சுப்பிரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விதி
மாட்டிறைச்சியை விற்க கூடாது என்று எதுவும் விதி இருக்கிறதா? யார் இப்படி ஆர்டர் போட்டது என்று வேலுசாமி கேட்டார். வட்டாட்சியர் சுப்பிரமணி இப்படி மாட்டிறைச்சிக்கு தடை போடும் வீடியோ இணையம் முழுக்க பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வட்டாட்சியர் சுப்பிரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்து இருந்தார்.

நடவடிக்கை
இந்த நிலையில் வட்டாட்சியர் சுப்பிரமணி தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவிநாசி வட்டாட்சியர் பொறுப்பில் இருந்து சுப்பிரமணி நீக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாட்டிறைச்சியை சுத்தமாக வெட்டுவது இல்லை என்று புகார் வந்தது. இதனால்தான் நடவடிக்கை எடுத்தேன் என்று வட்டாட்சியர் சுப்பிரமணி குறிப்பிட்டார்.இவர் ஊத்துக்குளியில் கூடுதல் ஆய்வாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால்
ஆனால் இவரின் விளக்கத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணியிட மாற்றம் முதல் கட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும் சுப்பிரமணி மொத்தமாக பணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications