திருப்பூர் மணிப்பூர் ஆகிவிடும்.. கலவரம் பாஜகவின் டிஎன்ஏவில் ஊறி இருக்கு.. முதல்வர் ஸ்டாலின் அட்டாக்
திருப்பூர்: கலவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவில் ஊறி இருக்கிறது. அராஜகமும் கலவரமும் செய்யும் பாஜக திருப்பூரை மணிப்பூர் போல மாற்றிவிடும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று அவிநாசியில் பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் களம் உச்ச கட்ட சூடுபிடித்துள்ளது.

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ ராசா மற்றும் திருப்பூர் தொகுதி சிபிஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திருப்பூர் அவிநாசியில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகின்ற தேர்தல் ஜனநாயகத்தை மீட்கவும், சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடக்கின்ற தேர்தல். இந்தியா கூட்டணியின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் அமைய வேண்டும். நேற்று சகோதரர் ராகுல் காந்தி தமிழ்நாடு வந்திருந்தார். டிவியில பார்த்திருப்பீங்க.. பாகுபலி படம் போல் பிரமாண்டமாக இருந்துச்சு.. ஒரே ஒரு மீட்டிங்.. டோட்டல் பாஜவும் க்ளோஸ்.
ராகுல் காந்தியின் ஒரு நாள் தமிழ்நாடு வருகையே... பிரதமர் மோடியின் மொத்த பிரசாரத்தையும் காலி செய்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பினால் மட்டுமே ஆள முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். சகோதரர் ராகுல் காந்தியின் நேற்றைய பேச்சிலேயே அவர் தமிழ்நாட்டை எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரியும்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு சர்வாதிகார நாடாக மாறிடும். நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். களவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவில் ஊறி இருக்கிறது. நேற்று கூட திருப்பூரில் நடந்ததை பார்த்து இருப்பீர்கள். வாக்கு கேட்டு வந்த பாஜகவினரிடம் ஜிஎஸ்டி தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாஜகவினர் அந்த சகோதரியை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தான் பாஜக பென்களுக்கு கொடுக்கின்ற மதிப்பு. அராஜகமும் கலவரமும் செய்யும் பாஜக திருப்பூரை மணிப்பூர் போல மாற்றிவிடும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.
பழனிசாமிக்கும் தமிழ்நாடு பாஜகவுக்கும் தான் பிரச்சினையே தவிர, பழனிசாமிக்கும் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பிரச்சினை இல்லை. யாரு விசுவாசமான அடிமை என்பதில் தான் இவர்களுக்குள் பிரச்சினை இருக்கலாம். பிரதமரை எதிர்த்து, ஒன்றிய பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது. ஏனென்றால், சசிகலாவிடம் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை பிரித்து தர்ம யுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பாஜக தான்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமியை தங்கள் பக்கம் கொண்டு வந்ததும் பாஜக தான். இரு துருவங்களாக இருந்த எடப்பாடியும், பன்னீர் செல்வத்தையும் ஒன்று சேர்த்ததும் பாஜக தான். டிடிவி தினகரனை கைது செய்து சிறையில் அடைத்து தனது அடிமையாக ஆக்கியதும் பாஜக தான். இப்போ இந்த ஓ பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் மிரட்டி அரசியலில் நிக்க வைத்துள்ளதும் பாஜக தான்.
சசிகலாவை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்ததும் பாஜகதான். எடப்பாடி பழனிசாமியை தனியாக நிக்க வைத்ததும் பாஜக தான்.. இப்படி டிவி சீரியல்களில் காட்சிகளை திடீர் திடீரென்று மாற்றுவது போல பாஜக சதி நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறது. உறுதியோடு சொல்கிறேன் பாஜக இந்த தேர்தலில் மண்ணை கவ்வும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த அதிமுக கூட்டணியில் சிறிய கட்சிகளே இடம் பெற்றுள்ளன.
தேமுதிக மட்டுமே ஓரளவு பெரிய கட்சியாக உள்ளது. மற்றொரு பக்கம், பாஜக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ள அதிமுக தற்போது, அக்கட்சியை கடுமையாக சாடத் தொடங்கியுள்ளது. பதிலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலையும் காட்டமாக விமர்சித்து வருகிறார்.
இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. மறுபக்கம் அதிமுக - பாஜக இடையே கள்ளக் கூட்டணி நீடிப்பதாக திமுக விமர்சித்து வருகிறது. இவ்வாறாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதேபோல் ஸ்டாலினும் அதிமுக, பாஜகவை விமர்சித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகிறார்.
-
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications