வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்னு சொன்னாரே?.. ஆனால் இப்ப என்னாச்சு.. டிடிவி தினகரன்
திருப்பூர்: என் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என முதல்வர் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார். ஆனால் தற்போது சொன்னதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் மாதம் அமமுக தேர்தல் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும்.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒரு பிரிவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு பிரிவாகவும் இருக்கிறார்கள். அதிமுக என்பது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வலுவாக போட்டியிடும் கட்சியாக இருந்தது.

எடப்பாடி பழனிசாமி
ஆனால் இன்று அதை எடப்பாடி பழனிசாமியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வட்டார கட்சியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடல் போன்ற அதிமுக இயக்கத்தை குட்டை மாதிரி உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வருங்காலத்தில் வெறும் 4 பேர் மட்டும் உட்கார்ந்து கொண்டு கட்சியை நடத்துவதுதான் அவர்களுடைய விருப்பமாக இருக்கிறது.

வட்டார கட்சி
வட்டார கட்சியாக உள்ள அதிமுக, இனி சமுதாய கட்சியாகவும் மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். அப்போது அவசரதியில் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியை கருணாநிதி கொடுக்கவில்லை.

வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்
அனுபவம் வாய்ந்தவர்கள்தான் அமைச்சராக இருந்தனர். ஸ்டாலினை அமைச்சராக்குவதற்கு கருணாநிதி பொறுமை காத்தார். ஆனால் ஸ்டாலினோ அவசரகதியில் உதயநிதியை அமைச்சராக அறிவித்தது ஏன் என தெரியவில்லை. என் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என ஸ்டாலின் முன்பு தெரிவித்தார். தற்போது சொன்னதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். வருங்காலத்தில் ஒரே வீட்டிலிருந்து இரண்டு முதல்வர்கள் கூட அறிவிப்புகளை வெளியிடலாம் என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

டிடிவி தினகரன்
இன்னொரு பேட்டியில் டிடிவி தினகரன் கூறுகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் மாசில்லாமல் பேச வேண்டும். ஏழை எளிய மக்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் இவர்கள் எல்லாம் அம்மா உணவகத்தால் எவ்வளவு பயனடைந்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். அரசாங்கமே நல்ல தரமான உணவு குறைந்த விலையில் விலைவாசி உயரும் நேரத்தில் அம்மா உணவகங்கள் மூலம் கொடுத்ததை பல பொருளாதார அறிஞர்களே பாராட்டினார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை மூடு விழா நடத்த வேண்டும் அல்லது அவர்களின் தலைவர் பெயரில் மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆதரவற்றோர்களுக்கு அட்சய பாத்திரமாக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை முடக்கினால் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். திராவிட மாடல் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இன்று முதல்வர் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல் துறையை சுயமாக இயங்கவிட வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் தலைவிரித்தாடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். அமமுக சுயமாக சிந்தித்து செயல்படும் இயக்கம். இபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்பட்டது தவறு என்பதை ஓபிஎஸ் உணர்ந்து விட்டார் என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!











Click it and Unblock the Notifications