திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் காந்தி சுத்த வேஸ்ட்! பிரயோஜனம் இல்லாதவர்! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கிண்டல்!

Google Oneindia Tamil News

திருப்பூர்: பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அதனை கிண்டல் செய்துள்ளார்.

ராகுல் காந்தி என்ன தான் நடந்தாலும் அவரை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும் ராகுல் பிரயோஜனம் இல்லாதவர் எனவும் விமர்சித்துள்ளார்.

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இதனைத் தெரிவித்துள்ளார்.

நிதீஷ் குமார் ஆட்டம் ஆரம்பம்.. டெல்லி பயணம்.. ராகுல், கெஜ்ரிவாலுடன் சந்திப்பு.. ஓரணியாக்க முயற்சிநிதீஷ் குமார் ஆட்டம் ஆரம்பம்.. டெல்லி பயணம்.. ராகுல், கெஜ்ரிவாலுடன் சந்திப்பு.. ஓரணியாக்க முயற்சி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி


நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக இல்லாத நிலையில் இப்போதே தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார் ராகுல் காந்தி. அதன் ஒரு பகுதியாக பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களுக்கு நடைபயணம் செல்லவுள்ளார் ராகுல்காந்தி. சுமார் 3,500 கிமீ தூரம் பயணம் செய்யும் வகையில் ராகுலுக்கு பயணத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எல்.முருகன் கிண்டல்

எல்.முருகன் கிண்டல்

இந்நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணம் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்றும் இந்தியளவில் ராகுலை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கிண்டல் அடித்திருக்கிறார். சும்மா வேண்டுமானால் அவர் நடைபயணம் செல்வதை பற்றி நீங்களும் நானும் பேசிக்கொள்ளலாம் என்றும் அதனால் யாருக்கு என்ன பயன் எனவும் செய்தியாளர்களிடம் வினவினார்.

பயன் இல்லை

பயன் இல்லை


மேலும், ராகுல் காந்தி பிரயோஜம் இல்லாதவர் என்றும் எல்.முருகன் சாடியிருக்கிறார். மொத்தத்தில் அவரை பற்றி பேசுவதே வேஸ்ட் என்கிற வகையில் நையாண்டியாக பேசினார் எல்.முருகன். அதைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு பரந்து விரிந்து காணப்படுவதாகவும் கஞ்சாவை ஒழிக்க சிறப்பு தடுப்புக் குழு அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 தீவிர ஏற்பாடு

தீவிர ஏற்பாடு

ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாரத் ஜோடோ யாத்ரா பற்றி பாஜகவினர் இப்படி விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் ராகுல் மேற்கொள்ளும் நடைபயணத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

English summary
Union Minister of State L. Murugan has teased Rahul Gandhi's walk in the name of Bharat Jodo Yatra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X