திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கேட்டுச்சா".. அவங்கதானாம்.. ஏன் கிண்டல் செய்றீங்க.. திமுக மீது பாய்ந்த வேலூர் இப்ராஹிம்.. என்னவாம்?

திமுக அரசு மீது வேலூர் இப்ராஹிம் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்

Google Oneindia Tamil News

திருப்பூர்: சிறுபான்மையினருக்காக எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக அரசு, ஓட்டு வங்கிக்காக பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவருகிறது என்று வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பல்லடம் பாஜக அலுவலகத்தில் பாஜகவின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது:

"மத்திய அரசு சிறுபான்மையினருக்காக எத்தகைய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவை பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைகிறதா? என்பது குறித்து மாவட்ட வாரியாக கண்காணிக்கிறோம், ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.. அதன் ஒரு பகுதியாகத்தான் திருப்பூர் வந்திருக்கிறோம்..

எனது முதல் குழந்தை என் கைகளிலேயே இறந்து போனது.. எலான் மஸ்க் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? எனது முதல் குழந்தை என் கைகளிலேயே இறந்து போனது.. எலான் மஸ்க் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

வோட் பேங்க்

வோட் பேங்க்

கடந்த 8 வருடங்களில் பாஜக அரசு சிறுபான்மையினருக்கு செய்த திட்டங்களையும், கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் செய்த திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக அரசு தயாரா? சிறுபான்மையினருக்காக எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக அரசு, ஓட்டு வங்கிக்காக பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.. தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமானதாக இருக்கிறது.

பழைய பஸ்ஸ்டாண்டு

பழைய பஸ்ஸ்டாண்டு

பெட்ரோல் குண்டு, மனித வெடிகுண்டு தாக்குதல், கார்குண்டு வெடிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. 370 சட்டப்பிரிவு கொண்டு வருவதற்கு முன்பாக காஷ்மீர் எந்த அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததோ, அந்த அளவுக்கு தமிழகம் இப்போது இருக்கிறது.. 370 ஐ நீக்கிய பிறகு காஷ்மீர் தற்போது பாதுகாக்கப்பட்ட நகரமாக அனைத்து மத மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய நகரமாக விளங்கி வருகிறது.. ஆன்மீகத்தை அதிகளவு நேசிக்கக் கூடிய மக்கள் வசிக்கக்கூடிய திருப்பூர் மாநகரில், ஆன்மீகத்தை எதிர்த்த கலைஞரின் பெயரை பழைய பஸ் ஸ்டாண்டுக்கு சூட்டுவதற்கு பாஜக வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது.

கலைஞர் பேர்

கலைஞர் பேர்

அதற்கு பதிலாக, சுதந்திரத்திற்காக போராடிய தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். கூட்டுறவுத் துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து நிதியமைச்சர் வருத்தம் தெரிவிக்கக்கூடிய நிலையில், அவரை கிண்டல் செய்யும் வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி தந்துவருகிறார்.. இத்தகைய அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழக முதல்வர் எப்படி திறமையான ஆட்சி நடத்த முடியும்? தமிழக அரசின் செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்..

100%

100%

கர்நாடகாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததுமே, அது குண்டு வெடிப்புதான் என்று காவல்துறை தெளிவுபடுத்தி விசாரணையை துரிதப்படுத்தியது. ஆனால் தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெவ்வேறான தகவல்களை சொல்லி, மக்களை குழப்பி வந்தன.. தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மற்றும் அதன் தொடர்பு 100% இருக்கின்றன.. இதனை கட்டுப்படுத்த முடியாத வகையில் தமிழக காவல்துறையும் உளவுத்துறையும் இருக்கின்றன என்று வேலூர் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.

English summary
vellore ibrahim braised PM Modi and criticized dmk Government in Tiruppur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X