திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருப்பூர் கூட்டத்தில் அதிரடியாக பேசிய விஜயகாந்த் மகன்-வீடியோ

    திருப்பூர்: விஜயகாந்தை யாராவது தவறாக பேசினால் செவிலிலேயே அறையுங்கள் என அவரது மகன் விஜயபிரபாகரன் காட்டமாக பேசியுள்ளார்.

    திருப்பூரில் அந்த மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை திருப்பூர்- காங்கேயம் சாலையில் உள்ள ஓட்டல் மைதானத்தில் நடைபெற்றது.

    அப்போது விஜய பிரபாகரன் பேசுகையில்

    என்னை விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள். உங்கள் சகோதரனாக பாருங்கள். எனக்கு இங்கு எந்த பதவியும் தரப்படவில்லை. நான் கேப்டனின் மகன் என்பதே மிகப்பெரிய பொறுப்பு.

    ஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்ஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்

    அதிக இளைஞர்கள்

    அதிக இளைஞர்கள்

    இங்கு இளைஞனாக வந்துள்ளேன். திமுக வயதான கட்சி அதற்கு எதற்கு இளைஞர்கள் சேர்க்கை. இங்கு அதிக இளைஞர்கள் உள்ளனர். திமுகவினர் தேமுதிகவை பார்த்து காப்பி அடிக்கிறார்கள்.

    கேப்டன்

    கேப்டன்

    நாங்கள் யாரை பார்த்தும் காப்பி அடிக்கவில்லை. கேப்டன் வருவாரா என்றார்கள் சிங்கம் போல வந்து அமர்ந்துள்ளார். இனி கேப்டன் பற்றி அவதூறு பரப்பினால் செவிட்டில் விடுங்கள்.

    கண்ணை திறந்தால்

    கண்ணை திறந்தால்

    தேமுதிக தொண்டன் எனும் திமிரில் சொல்கிறேன். கேப்டன் லேசாக கண்ணை மூடியுள்ளார். அவர் கண்ணை திறந்தால் அனைத்து பயலும் காலி.

    பழைய கட்சி திமுக

    பழைய கட்சி திமுக

    தேமுதிக எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த கட்சி. இது வெட்ட வெட்ட வளரும் கட்சி. என்னையும் உதயநிதி ஸ்டாலினையும் கம்பேர் செய்ய வேண்டாம் அவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கு. அது பழைய கட்சி, இது புதிய கட்சி என்றார்.

    English summary
    Vijaya Prabhakaran in Tiruppur says that if anyone made derrogatory statement against Captain, slam them immediately.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X