திருப்பூரில் கூகுள் மேப்பை நம்பி காரில் வேகமாக சென்ற இளைஞர்கள்.. மறக்கவே முடியாத சம்பவம்
திருப்பூர்: திருப்பூரில் கூகுள் மேப்பை நம்பி சென்று ரயில்வே பாலத்திற்கு அடியில் மாட்டியிருக்கிறார்கள் காரில் வந்த இரண்டு பேர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பின்னாலேயே வாகனத்தை இயக்கி ஒரு வழியாக தப்பி வந்துள்ளார்கள். அந்த பகுதியில் வேலை நடந்து வந்த நிலையில், கூகுள் மேப்பை நம்பி சென்று அவதிப்பட்டுள்ளார் கார் ஒட்டுநர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கூகுள் மேப்பில் காட்டும் அனைத்து வழிகளும் சரியான வழிகளாக இருப்பது இல்லை.. இதற்கு காரணம் கூகுள் ஏஐ உதவியுடன் செயல்படுகிறது என்றாலும், பெரும்பாலான வழிகள் எல்லாம் யாராவது ஒருவர் வழிகாட்டியிருப்பார். தேசிய நெடுஞ்சாலைகள் தொடங்கி, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகள், நகராட்சி சாலைகள், ஊராட்சி சாலைகள், ஊர்களுக்குள் போகும் சாலைகள் என எல்லா பகுதிக்கும் கூகுளில் வழிபார்க்க முடியும்.

உங்கள் ஊர் அருகே உள்ள வங்கிக்கோ, அல்லது உங்கள் நண்பர் வீட்டிற்கோ செல்ல கூகுளில் லோக்கேஷனை வாங்கிக்கொண்டு எளிதாக போக முடியும். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. நீங்கள் போகும் பாதையில் ஏதாவது வேலை நடந்து கொண்டிருந்தால் நிச்சயம் மாட்டிக்கொள்வீர்கள். ஏனெனில் வேலை நடக்கிறது என்று யாராவது அதில் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை கூகுள் உங்களிடம் தெரிவிக்கும். இல்லாவிட்டால் உங்களை கூகுள் பாதை இல்லாத இடத்திலோ அல்லது முட்டு சந்திலோ கொண்டு போய் நிறுத்திவிடும்.
அதேபோல் பெரிய நகரங்களில் சில பகுதிகளில் பாதைகள் இருப்பதாக யாராவது சிலர் தவறாக பதிவு செய்வது அல்லது ரூட் இருப்பதாக காட்டப்படும் பதிவுகளை வைத்து இந்த பாதையில் போகலாம் என கூகுள் காட்டும். ஆனால் அந்த பாதையில் போகவே முடியாத நிலை இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடையும் சம்பவங்கள் நடக்கும். அதேபோல் சில பாதைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அது தெரியாமல் அந்த பாதையில் சென்று உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது.
அண்மையில் சென்னை பள்ளக்கரணையில் உணவு டெலிவரி செய்ய வந்த நபர் , கூகுள் மேம்ப்பை நம்பி போனார். ஆனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள சேற்றில் சிக்கி அவதிப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் வந்து மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் திருப்பூரில் காரில் சென்ற இருவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி சாலையில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் சென்றவர்கள், கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்று கொண்டிருந்தனர். சூசையாபுரம் கிழக்கு பகுதி வழியாக அய்யப்பன் கோவில் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் புகுந்தனர். ஆனால் அந்த சாலையில் கார்கள் செல்ல முடியாதபடி தடுப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இது அவர்களுக்கு தெரியவில்லை..
இதற்கும் எதிர்திசையில் காரில் வந்தவர்கள் முகப்பு விளக்கை அணைத்து எச்சரித்து வழியில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் யாரையும் கவனிக்காமல் சாலையில் கூகுள் மேம்பை பார்த்தபடி கடந்து சென்றுள்ளனர். இறுதியாக சாலையின் நடுவே தடுப்பு இருந்ததை கண்டுள்ளனர். காரை அங்கு திருப்ப முடியாமல் அவதிப்பட்ட அவர்கள், சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கியே காரை இயக்கியுள்ளனர். அதன்பின்னர் மாற்றுப்பாதையில் சென்றனர். கூகுளை நம்பி சென்ற கார் ஓட்டுநர் முட்டு சந்தில் நின்ற சம்பவம் திருப்பூரில் பேசுபொருளாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications