அடுத்தடுத்த 3 சம்பவங்கள்.. சாட்டையை சுளீரென சுழற்றிய ஸ்டாலின்.. பாஜகவின் அஸ்திவாரமே ஆடுதே.. ப்பா
திருப்பூர்: தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியமான விஷயங்களில் வதந்தி பரப்பிய பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து ஆக்சன் எடுத்து வருகிறது.
சமீபத்தில்தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த பாஜகவை சேர்ந்த கட்டெறும்பு என்னும் இசக்கி கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளே ஒரு யுவராஜ் இருக்கலாம்.. ஆனால் வெளியே ஆயிரம் யுவராஜ் இருக்கிறோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் இவர் போஸ்ட் செய்து இருந்தார்.

ட்விட்டரில் கட்டெறும்பு என்னும் பெயரில் இயங்கி வரும் இசக்கி ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை போஸ்ட் செய்து வருகிறார். இவர் பாஜக நிர்வாகி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று போலீசார் மூலம் இசக்கி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அவரை கைது செய்து போலீசார் ரிமாண்ட் செய்தனர். இதையடுத்து உடல்நிலையை காரணம் காட்டி கோர்ட் விசாரணையில் இசக்கி மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அவரின் மன்னிப்பு கடிதத்தை அடுத்து கண்டிஷன் பெயிலில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அடுத்த கைது: இதையடுத்து தமிழ்நாட்டில் திமுகவினர் அரசுப்பள்ளியில் சாராயம் காய்ச்சியதாக பொய்யான செய்தி ஒன்றை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.

ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.
அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது. இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் திமுகவினர் அரசுப்பள்ளியில் சாராயம் காய்ச்சியதாக பொய்யான செய்தி ஒன்றை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத் என்பவர் வெளியிட்டார். ஊடகங்களில் வெளியாகாத செய்தியை ஊடகங்களில் வெளியானது போல காட்டி இணையத்தில் செய்தி வெளியிட்டார்.

அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி செய்திகளை வெளியிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதற்கு முன்பே வதந்திகளை பரப்பும் வகையில், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் செய்திகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
உதாரணமாக நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களில் சென்டர்கள் அமைக்கப்பட்டதற்கு.. மாணவிகளே இந்த தேர்வு மையங்களை தேர்வு செய்து இருப்பார்கள். பாய் பிரண்டுகளுடன் சுற்ற இந்த மையங்களை தேர்வு செய்து இருப்பார்கள் என்று சர்ச்சை போஸ்டை போட்டு இருந்தார். அதோடு பிரியாணியில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை இஸ்லாமியர்கள் கலப்பதாகவும் போஸ்ட் செய்து இருந்தார்.
இது போல தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் பல வதந்திகளை பரப்பி வந்தார். அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி செய்திகளை வெளியிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத்திற்கு எதிராக திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பலசுப்பிரமணியம் என்பவர் கோவையில் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்க காத்துகொண்டு இருந்தனர். இதையடுத்து நேற்று ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத் தமிழ்நாடு திரும்பியதாக தகவல் வந்தது. அவர் கோவை விமானம் நிலையம் வந்த தகவல் கிடைத்த நிலையில் திருப்பூர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். விமான நிலையத்திலேயே வைத்து அவரை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கோர்ட் விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
3வது கைது: இந்த நிலையில்தான் தற்போது ஒடிசா ரயில் விபத்து குறித்து மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பிய கன்னியாகுமரியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் செந்தில் குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் ஒடிசா ரயில் விபத்திற்கு காரணம் இஸ்லாமியர் என்று பொய்யாக செய்த பதவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியமான விஷயங்களில் வதந்தி பரப்பிய பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து ஆக்சன் எடுத்து வருகிறது. பாஜக தரப்பினர் இடையே இந்த தொடர் ஆக்சன்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications