டிஎன்பிஎஸ்சி குரூப் எக்ஸாம் மட்டுமா.. இன்னும் இருக்கே! 1.20 லட்சம் பேருக்கு ஜாக்பாட்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 வருடங்களில் நிரப்பப்படும் அரசு வேலைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அதன்படி தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உட்பட பல்வேறு தேர்வுகள் மூலம் 70 ஆயிரம் கூடுதல் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது போக மற்ற தேர்வுகள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளன. 2026 ஜனவரிக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன.

tnpsc jobs

குரூப் தேர்வு மட்டுமின்றி பல தேர்வுகள் மூலம் நிறைய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குரூப் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் நடக்கும் குரூப் தேர்வுகள் மூலம் மேற்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

tnpsc jobs

இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

மற்ற தேர்வுகள்: கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.

குரூப் 1 தேர்வு: ஜூலை 13 அன்று குரூப் 1 பதிவுகளுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோல் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 1 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த முறைப்படி ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷெட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது.

அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மாற்றி சரியான விடையை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓஎம்ஆர் ஷீட்டில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 13 அன்று குரூப் 1 பதிவுகளுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. இதிலும் இன்வாலிட்டி மதிப்பெண் முறையை தொடர உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+