வேலியே பயிரை மேய்ந்த கதை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீசார்.. சஸ்பெண்ட் செய்து அதிரடி கைது!
திருச்சி: திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு தனது ஆண் நண்பருடன் வந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையினரே, சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி முக்கொம்பு அணை சுற்றுலா தளத்திற்கு தனது ஆண் நண்பருடன் வந்த 17 வயது சிறுமியிடம் போலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்டோர் இதுதொடர்பாக ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்பட 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட எஸ்.பி உத்தரவைத் தொடர்ந்து, எஸ்.ஐ சசிகுமார், காவலர்கள் பிரசாத், சித்தார்த், சங்கரபாண்டி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
