சட்ட விரோத மது விற்பனை.. புகார் அளித்த மாற்றுத்திறனாளி மீது கொடூர தாக்குதல்! 2 போலீசார் சஸ்பெண்ட்
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியைத் தாக்கிய 3 காவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி விராலிமலை அடுத்துள்ள கவரப்பட்டி பகவான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சங்கர். 29 வயதாகும் இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவர்.
கவரப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளித்த இவரை அப்பகுதியில் உள்ள போலீார் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாற்றுத்திறனாளி
திருச்சி கவரப்பட்டி பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள், பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு சங்கர் கைப்பேசி மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து எஸ்பி அலுவலகத்தினர், விராலிமலை காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்ட இந்த விவகாரங்களைத் தெரிவித்து, சங்கரின் கைப்பேசி எண்ணையும் கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

தாக்குதல்
இப்போது காவலர் ஒருவர் சங்கரை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் செந்தில் மற்றும் காவலர் பிரபு, அசோக் ஆகியோர் சங்கரை நேரில் சென்று சந்தித்து, தாக்கியுள்ளனர். மேலும், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அருகே இருந்த மரத்தில் சாய்த்து லத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பலத்த காயம்
இதில் சங்கருக்கு கை, கால், நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு கட்டத்தில் அவர் மயங்கி உள்ளார். இதனால் பதற்றமடைந்த போலீசார் அவரை வீட்டிற்குப் போகச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், அவரை நடக்க முடியாத அளவுக்குத் தாக்கியதால், அவர் அங்கேயே மயக்கமடைந்துள்ளார். போலீஸ் அழைத்துச் சென்று நீண்ட நேரம் ஆகியதால், அவரது தாயார் போலீஸ் நிலையத்திற்கு சங்கரை தேடி வந்துள்ளார்.

சஸ்பெண்ட்
அப்போது தான் சங்கர் மயங்கிய நிலையில் இருப்பதை அவரது தாயார் கண்டறிந்துள்ளார். இதையடுத்து அங்குள்ளவர்களின் உதவியுடன் சங்கரை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளி காவலர்களே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாற்றுத்திறனாளியைத் தாக்கிய 3 காவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications