Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் முதல் பாதிப்பு?.. மலேசியாவிலிருந்து திருச்சி வந்த 3 பேருக்கு கொரோனா வைரஸா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மலேசியா, ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறப்படுவதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தவில்லை. திருச்சி அரசு மருத்துவ நிர்வாகமும் கொரோனா அறிகுறி என கூறவில்லை.

Recommended Video

    Corona Virus in Tamilnadu | Trichy Government Hospital

    சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் வந்திறங்கும் பயணிகளை விமான நிலையங்களில் மருத்துவ குழுவினர் தீவிர பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.

    3 people from Tamilnadu admitted in Trichy GH after infected with Coronavirus?

    மேலும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் திருச்சி வந்திறங்கும் பயணிகளை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் வந்தது. இதில் வந்திறங்கிய பயணிகளை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த சுந்தரபாண்டி (25) என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக தெரிகிறது. இதேபோல மலேசியாவில் ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளியணையை சேர்ந்த தம்பதியின் 1 வயது குழந்தை முகமது இப்ராகிமுக்கும், ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் திருச்சி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் கிரு‌‌ஷ்ணாபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியனுக்கும் (25) கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து 3 பேரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேருக்கும் காய்ச்சல் இருந்தது. கொரோனா வைரஸ் அறிகுறி பெரிதாக அவர்களுக்கு இல்லை. 3 பேருக்கும் நேற்று காய்ச்சல் சற்று குறைந்துள்ளது.

    அவர்களது ரத்தம், சளி மாதிரி இதுவரை எடுக்கவில்லை. 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சைக்கு பின் அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்' என்றனர். அடுத்தடுத்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சந்தேகத்தின் பேரில் இவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவே தெரிகிறது. திருச்சி விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முழு கண்காணிப்பை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் முழுமையாக சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையத்தில் 24 மணி நேரமும் சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பணிப் பெண்கள் முக கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+