ஏய்யா.. உனக்கு மோதறதுக்கு என் நாய் தான் கிடைச்சுதா?.. சண்டை.. கடைசியில் ஒரு உயிர் போச்சு!
இளைஞனை கொன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
திருச்சி: ரோட்டில் வந்து கொண்டிருந்த நாய் மீது பைக் மோதிவிட்டது.. இதுதான் ஒரு உயிரை கொலை செய்யும்வரை சென்றுவிட்டது. "உனக்கு மோதறதுக்கு என் நாய் தான் கிடைச்சுதா?" என்று ஆரம்பித்து இருக்கிறது இந்த சண்டை!
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனி பிரதானபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவருக்கு 35 வயதாகிறது. இவர் ஒரு நாய் வளர்த்து வருகிறார்.

கடந்த 22-ந் தேதி அந்த வளர்ப்பு நாயுடன் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன், குபேந்திரன் ஆகியோர் பைக்கில் வந்து, நாய் மீது மோதி விட்டதாக கூறப்படுகிறது. இது தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என தெரியவில்லை.
ஆனால், மோதல் தொடங்கிவிட்டது. "உனக்கு மோதறதுக்கு என் நாய் தான் கிடைச்சுதா?" என்று வீரமுத்து கேட்டு, பைக்கில் வந்த அந்த 2 பேரையும் தாக்கியதாக தெரிகிறது. அவ்வளவுதான்.. அடி வாங்கிய அந்த 2 பேரும், ஆதரவாளர்களை உருட்டுக்கட்டையுடன் வரவழைத்து வீரமுத்துவை சரமாரியாக தாக்கியதில், வீரமுத்து உயிர் பிரிந்தது. இந்த கொலை தொடர்பாக நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
மாரியப்பன், அவரது தம்பி குபேந்திரன், பரமசிவம், ரவி, மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர்தான் உருட்டுக்கட்டையால் வீரமுத்துவை கொன்றவர்கள் என்பது உறுதியானது. இந்த இவர்கள் 5 பேரும் நவல்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் 4 பேரை திருச்சி ஜெயிலும், 15 வயது சிறுவனை மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.
இருந்தாலும் இந்த கொலையில் முக்கிய குற்றவாளி ஒருவர் தப்பி உள்ளாராம். அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. நாய் மேல பைக் மோதிய விவகாரம் இப்படி கொலை, கேஸ், ஜெயில் வரை சென்றுவிட்ட சம்பவம் திருவெறும்பூர் பகுதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications