திருச்சி அருகே கோவில் திருவிழாவில் விபரீதம்… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
திருச்சி: திருச்சி அருகே கோவில் திருவிழாவின் போது, ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் பகுதியில் கருப்பசாமி கோவில் அமைந்து உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி சிறப்புடன் கொண்டாடப்படும். இதற்காக திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ஒன்று கூடுவர். அந்தவகையில், இந்தாண்டும் ஏராளமானோர் குவிந்தனர்.

கோவில் திருவிழாவில் கருப்பசாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதன்பின் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிடிகாசு எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வீசப்படும் சில்லறை காசுகளை எடுத்து வீட்டில் வைத்தால் சிறப்பு என்பதால் கூட்டத்தினர் முண்டியடித்துக்கொண்டு காசுகளை எடுக்க முயற்சித்தனர்.

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு துறையூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். திருவிழாவின் போது, பிடிகாசுகளை எடுப்பதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications