தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 2 தேர்வு.. ஒரே மையத்தில் தேர்வெழுதிய தந்தை-மகள்! திருச்சியில் தான்!
திருச்சி : குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கு காலி பணியிடங்களுக்கான நிரப்புவதற்காக தேவு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட நிலையில், இன்று தமிழகம் முழுவதும் முதல்நிலை தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் இத்தேர்வை தந்தையும், மகளும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டு காலியாக உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்ளிட்ட குரூப் 2 பதவிகளுக்கு 507 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதே போல உதவியாளர், நேர்முக உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப்பு 2 ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தது. குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வர்கள் பலரும் ஆர்வத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், 19ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று கடைசி நாள் எனவும் அறிவித்திருந்தது. இதேபோல ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேர்வர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தை அளித்த நிலையில், அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு இன்று தேர்வு நடைபெற்றது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2700 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் அவர்களில் பலர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு மையத்திற்கு 9:00 மணிக்கு முன்னதாகவே வந்து விட வேண்டும் எனவும் 9 மணிக்கு மேல் வருபவர்கள் கட்டாயம் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சில தேர்வு மையங்களில் தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற காட்சிகளையும் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு என்றாலே ஏதாவது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிச்சயம் நடக்கும். மணக் கோளத்தில் தேர்வு எழுதுவது உள்ளிட்ட பல விஷயங்களை நாம் பார்த்திருப்போம். இந்த நிலையில் தற்போது புதுமையாக திருச்சியில் ஒரே தேர்வு மையத்தில் தந்தையும் மகளும் தேர்வு எழுதி சுவாரசிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்காக திருச்சி பொன்மலைப்பட்டி திரு.இருதய பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் தேர்வு எழுத வந்திருந்தனர். அந்த தேர்வு மையத்திற்கு திருச்சியை சேர்ந்த வேதியியல் ஆசியரான இளங்கோவனும் தேர்வு எழுத வந்திருந்தார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி படித்து வருவது குறிப்பிடத்தக்கது. சுவாரஸ்ய நிகழ்வாக சிவில் இஞ்சினியரிங் படித்து வரும் அவரது மகள் மதுபாலாவும் அதே தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்திருந்தார்.
இருவருமே கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த தேர்வுகளின் போது இருவரும் வேறு வேறு தேர்வு மையங்களில் எழுதி வந்த நிலையில் தற்போது இருவருக்கும் ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இருவருக்கும் வேறு வேறு தேர்வு அறை ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். பல ஆண்டுகளாகவே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தான் தயாராகி வருவதாகவும் தற்போது மகளுடன் சேர்ந்து தேர்வு எழுதுவது மகிழ்ச்சியாக இருப்பதாக இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications