திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சியில் 332 தூய்மைப் பணியாளர்களுக்கு விலையில்லா அரிசி, காய்கறிகள்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாநகர் அதிமுக மாவட்ட கழக சார்பில் 14 வது நாளாக இன்று மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 332 பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் விலையில்லா அரிசி, காய்கறிகளை மாநகர மாவட்ட செயலாளர் ப.குமார் வழங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையின்படி திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்மலை கோட்ட அலுவலகத்தில் தொடர்ந்து 14-வது நாளாக இன்று விலையில்லா அரிசி பைகள் மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADMK gives free rice and vegetables for Sanitation workers in Trichy

இதில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் திருச்சி மாவட்ட மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பொருட்களை வழங்கினார்கள்.

மீதமுள்ள ஶ்ரீரங்கம், கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய கோட்டங்களில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் மற்றும் அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என்று மாநகர மாவட்ட செயலாளர் ப. குமார் தெரிவித்தார்.

அதேபோல் நேற்று திருவெறும்பூர் பகுதி கழகத்திற்கு உட்பட பிலோமீனாள் புரம், அண்ணா நகர், ஆர்.எஸ்புரம் உள்ளிட்ட தெருக்களில் தொடர்ந்து 13 வது நாளாக இல்லம் தோறும் விலையில்லா காய்கறி தொகுப்புகளை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் வி.அருள்ஜோதி, பொன்மலை பகுதி செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் , பொன்மலை முன்னாள் கோட்டத்தலைவர் என்.மனோகரன், அமராவதி கூட்டுறவு சங்க தலைவர் ஏர்போர்ட் விஜி, 60A வட்ட கழக செயலாளர் எஸ்.ராஜா அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

English summary
ADMK gives free rice and vegetables for Sanitation workers in Trichy. Kapasura water also given.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X