அன்பில் மகேஷின் மாமனாக நிற்கிறேன்! 15 ஆண்டுகள் கழித்து திருச்சியில் மேடையேறிய திருச்சி சிவா கர்ஜனை!
திருச்சி: சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் திமுக நிகழ்ச்சியில் மேடையேறி பேசிய திருச்சி சிவா அன்பில் மகேஷின் மாமனாக நிற்கிறேன் என பெருமிதம் தெரிவித்தார்.
திருச்சி சிவாவின் அருமை, பெருமைகள் அறிந்து அவரை எத்தனையோ திமுக நிர்வாகிகள் தங்கள் ஊர்களுக்கு வரவழைத்து தேதி கேட்டு வாங்கி பொதுக்கூட்டங்கள் நடத்தியிருக்கின்றனர்.
ஆனால் திருச்சியில் மட்டும் திருச்சி சிவாவை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்த நிர்வாகிகள் முன்வராத நிலை இருந்தது.

ஸ்டாலின் பிறந்தநாள்
முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை பகுதியில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், பொதுக்கூட்டமும் நேற்றிரவு நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பின் பேரில் இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூரில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் மேடையேறியதால் உற்சாகம் பொங்க பேசினார் திருச்சி சிவா.

திருச்சி சிவா
நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக அன்பில் மகேஷ் தன்னிடம் தேதி கேட்டதாகவும் அவர் கேட்டவுடன் தாம் ஒப்புக் கொண்டதாகவும் கூறிய திருச்சி சிவா, தாம் பொதுவாக உறவுமுறை வைத்து பேச மாட்டேன் என்றும் ஆனால் இந்த இடத்தில் அன்பில் மகேஷின் மாமனாக நிற்கிறேன் எனவும் உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். தங்கள் வீட்டுப் பிள்ளை மாநிலத்தின் அமைச்சராக இருப்பது தனக்கு பெருமை தருவதாக திருச்சி சிவா கூறினார்.

திடீர் திருப்பம்
திருச்சியில் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் மட்டும் திருச்சி சிவா கலந்துகொண்டு வந்தார். மற்றபடி உள்ளூர் நிர்வாகிகள் நடத்தும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அவருக்கு அழைப்புச் செல்லாததால் அவரும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் திருச்சி திமுகவின் திடீர் திருப்பமாக நேற்றைய நிகழ்வு நடந்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இனி அடுத்தடுத்து அவர் தொடர்ச்சியாக பங்கேற்பார் எனத் தெரிகிறது.

டெல்லி அரசியல்
டெல்லியை மையமாக வைத்து திருச்சி சிவா அரசியல் செய்து வந்தாலும் உள்ளூரில் கட்சி நிகழ்ச்சிகளில் பேச முடியவில்லையே என்ற வருத்தமும், ஆதங்கமும் அவருக்கு உள்ளூர இருந்து வந்தது. அந்த வருத்தத்தை போக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவரை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications